புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஜூன், 2020

இந்தியா, சீனாவுக்கு பிரித்தானிய பிரதமர் வேண்டுகோள்

Jaffna Editor
எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில், இந்தியா-சீனா இடையிலான மோதலால் பிரித்தானிய நலனுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பழமைவாத கட்சி உறுப்பினர் பிலிக் டிரம்மண்ட் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-

லடாக்கில் உள்ள சூழ்நிலை மிகவும் தீவிரமான, கவலைக்குரிய அம்சமாகும். இதை பிரித்தானியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்