-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

28 ஜூன், 2020

தேர்தலுக்காக புலி விசுவாசம் காட்டி பேசும் துரோகி கருணா வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம்: கருணா?

Jaffna Editor
விடுதலைப்புலிகள் அமைப்பில் சாதிய கட்டமைப்பென்ற பேச்சே இருக்கவில்லை.பொய்களை கூறி வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாமென கருணா தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு யுத்தத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. பானுதான் அந்த யுத்தத்தை வழிநடத்தினார் எனவும் தெரிவித்து கருணா தன்னைகருணா அம்மான் என அழைக்கும்போது விருப்பமாக உள்ளது. அதிகமான மக்கள் அப்படித்தான் அழைக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் நாங்கள் போராடியபோது காட்டிக் குடுத்தவர்கள் அனைவரும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கிறார்கள். எனது விவகாரத்தில் பிரச்சனையை பெரிதாக்கியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். ஒரு தமிழனிற்கு பிரச்சனையென்றால், துணைக்கு வராமல் அவர்கள் பிரச்சனையை தூண்டி விட்டனர்.

ஆனையிறவு சண்டையை வழிநடத்தியது பானு. அவர்தான் கொடியேற்றினார். எனது பங்கு வேறு. ஆனால் நான் பழைய விடயங்களை பேச விரும்பவில்லை. ஆனையிறவு சமரில் நான் இருக்கவில்லை என வரும் விமர்சனங்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை.

நான் என்னுடன் இருந்த 6000 போராளிகளையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு, அலிசாகிர் மௌலானாவுடன் கொழும்பிற்கு சென்றேன். ஆனால், ரணில் என்னை பிரித்தெடுக்கவில்லை. தலைவர் என்னை ஒருநாளும் துரோகியென கூறவில்லையெனவும் கருணா மீள தெரிவித்துள்ளார்.

விளம்பரம்