புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2020

புரெவி சூறாவளி இலங்கை விட்டு விலகிச் சென்றது

www.pungudutivuswiss.com
புரெவி என்ற சூறாவளியானது தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டல வியல் திணைக் களம் தெரிவித்துள்ளது.

மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான வேகம் கொண்ட இந்த சூறாவளியானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்.

கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற் றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாளை காலை வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளு மாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

ஏனைய கடற்பரப்புகளில் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை யோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad