புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2020

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் நேற்று

இரவு பத்து மணிக்கு கணிக்கப்பட்ட நீரின் அளவின் அடிப்படையில் சில குளங்கள் இன்று வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 19 அடியாக உயர்ந்துள்ளதுடன் கனகாம்பிகைக் குளத்தின் நீர் மட்டம் எட்டு அடியாகவும் அதிகரித்துள்ளது. பெரியகுளம் 4 அங்குலம் வரை வான்பாய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை, கனகாம்பிகைக் குளம் வான் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad