நிலவும் வானிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி வரையான காலப் பகுதியில் பல பகுதிகளுக்கும் சராசரியாக கடந்த 36 மணியளங்களில் 125 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. இந்த நிலைமை இன்னமும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்பதனால் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய தாழ்நிலப் பகுதிகள், குறிப்பாக யாழ் நகரை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதனால் அவதானமாக இருப்பது அவசியமானதாகும். மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து 28ஆம் தேதி வரையும் வங்காள விரிகுடாவில் புயல் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் அக்கால பகுதிகளிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகக் கன மழையைப் பெறும். வடகீழ்ப் பருவக்காற்று இன்னமும் உச்சம் பெறவில்லை. பருவ மழைக்கான காலம் இன்னமும் போதுமானதாக உள்ளது. எதிர்பார்க்கும் மழை கிடைக்கும் என தெரிவித்துள்ளார் |