-

17 நவ., 2025

நள்ளிரவு வேளையில் திருமலையில் அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்! விசேட அதிரப்படையினர் குவிப்பு

www.pungudutivuswiss.com
திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர்
 சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. 

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், வெளியிட்டுள்ள ஒரு குரல் பதிவில், அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு குறித்த சிலை அகற்றப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

குறித்த குரல் பதிவில், "8 மணியளவிலே அடாவடியாக சிலை கொண்டு வந்து வைக்கப்பட்ட போது அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு தொலைபேசி அழைப்பு எடுத்து பேசப்பட்டது. 

இதன்போது 3 மணித்தியாலங்களுக்குள் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார். 

இரண்டாம் இணைப்பு

மேலும் கண்டறிக
மரண அறிவித்தல் சேவை
உலகச் செய்திகள்
சுவிஸ் வாழ் தமிழர்கள்
ஆன்மீக செய்திகள்
இலங்கையின்
இலங்கை
பிரித்தானியா விசா சேவை
பிரான்ஸ் கலாச்சார நிகழ்வுகள்
ஜேர்மனி தொழில் வாய்ப்புகள்
இலங்கை தொழில்நுட்ப சாதனங்கள்

திருகோணமலையில் தற்போது வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, குறித்த இடத்தில் விசேட பாதுகாப்பு அணியினர் கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக நாளையதினம்(17) காலை திருகோணமலை மாநகரசபை உறுப்பினர்களை நகரசபையில் ஒன்று கூடுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட குகதாசன் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

திருகோணமலையில் கடற்கரையோரமாக சட்டவிரோதமாக புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் அந்த இடத்திலே பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.

 குறித்த பகுதியில் கட்டிடம் அமைக்க நீதிமன்றம் தடை இல்லை எனவும் அத்தோடு கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு, குறித்த பகுதியில் முன்னைய காலத்தில் பௌத்தர்களுக்கான அறநெறி பாடசாலை காணப்பட்டதாகவும் பின்னர் சுனாமி ஏற்பட்ட பின்னர் அது அழிந்து போய் விட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ad

ad