-

17 நவ., 2025

வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது! [Monday 2025-11-17 06:00]

www.pungudutivuswiss.com

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 23 வயது திருமணமானவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பெண் ஒருவர், அக்டோபர் 25 ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்தபோது ஒரு இளைஞர் தகாத நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறி இலங்கை சுற்றுலா பொலிஸிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக சுற்றுலா பிரிவு பொலிஸார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண் அன்று அறுகம்பை யிலிருந்து பாசிக்குடாவுக்குச் சென்றபோது திருக்கோவில் பகுதியில் குறித்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

ad

ad