-

17 நவ., 2025

அருண் ஹேமசந்திர தேசிய மக்கள் சக்தியை விட்டு , தமிழரசு கட்சியில் இணைய வேண்டும்

www.pungudutivuswiss.com


நாட்டில் இனவாதத்தை தூண்டும் செயலாகத்தான் திருகோணமலையில்
 சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற இன்றைய அமர்வில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்கின்றது. திருகோணமலையில் இது ஒரு எச்சரிக்கை சம்பவமாக துரதிஸ்டவசமான சம்பவமாக இது பதிவாயுள்ளது. 

தயாசிறி ஜெயசேகர, உங்களுடைய இனவாதத்துக்கு இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு இடமளிக்கவேண்டாம். அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள விடயங்களின் படி நாட்டில் சட்டவிரோத செயலுக்கு அனுமதிக்ககூடாது.

திருகோணமலை கடற்கரையில் விகாரை ஒன்று உருவெடுத்தது. அருண் பிரேமசந்திர இது தொடர்பில் ஒரு கரிசணையுடன் இருந்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணை முன்னெடுக்கபட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இன்று பொலிஸ் பாதுகாப்புடன் சிலை வைக்கப்படுகின்றது.

இனவாத செயற்பாடு தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தொலைபேசிவாயிலாக தொடர்பு கொண்டு இது தொடர்பில் பேசியிருந்தேன். அப்போது அவர், சிலையை பாதுகாக்க எடுத்துச்சென்றதாக கூறினார். ஆனால் அது பொய். காணொளிகளை பார்த்தால் உண்மைநிலை தெரியும். 

கடந்த வாரம் தான் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டை வரவேற்றேன். ஆனால், இந்த வாரம் இந்த செயலை பார்த்தால் வியப்பாக இருக்கின்றது. இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்

கடந்த தசாப்த காலங்களில் பௌத்த மத அடையாளங்கள் தமிழ் மக்களால் அழிக்கப்பட்டது இல்லை. தமிழ் மக்கள் அவ்வளவு ஏளனமானவர்கள் அல்ல. விடுதலைப்புலிகள் கூட இவ்வாறு செயற்பட வில்லை.

தோழர் அருண் ஹேமசந்திர உங்கள் கட்சியை விட்டு விட்டு எங்கள் கட்சியில் வந்து சேருங்கள். உங்களின் சங்கட நிலை புரிகின்றது. செய்யும் விடயம் சரியா இது உங்களுக்கு சரியானதாக தெரிகின்றதா?

ஏன் ஞாயிற்றுக்கிழமை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றீர்கள்? இந்த நாட்டில் இனவாதத்திற்கு ஊக்கமளிக்கவேண்டாம். நாங்கள் ஆயிரம் பேரை களமிறக்கி போராட்டத்தில் ஈடுபடலாம். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. என்றார். 

ad

ad