-

17 நவ., 2025

மீண்டும் புத்தர் சிலை நிறுவப்படும்! [Monday 2025-11-17 16:00]

www.pungudutivuswiss.com

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டதாகவும், இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விளக்கமளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று அந்த புத்தர் சிலையை குறித்த விகாரையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம். அத்தோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால், அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின்படியே செயற்பட வேண்டியுள்ளது. இந்த காணி தொடர்பிலான பிரச்சினையை நீதிமன்றத்திலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நீதிமன்றத்திற்கு காரணங்களை சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கு பின்னர் திருகோணமலையில் எந்த பிரச்சினையும் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்

ad

ad