பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படக் கூடிய சாத்தியம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். கொக்குவிலைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு
யாழ். கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் காணாமற் போயுள்ளதாக இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்.பொலிஸார்
பிரிட்டனிலிருந்து மேலும் 600 இலங்கையர் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்!
பிரித்தானியாவில் தஞ்சமடைந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600 இலங்கையரை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
திமுக தலைவரான கருணாநிதிக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசும் இது குறித்து பரிசீலிக்க
வெள்ளவத்தையில் நடத்தப்பட்டு வந்த விபசாரவிடுதிக்கும் மேர்வின் சில்வாவுக்கும் தொடர்பு
அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்பாளரால் வெள்ளவத்தையில் நடத்தப்பட்டு வந்திருக்கின்ற விபச்சார விடுதியே ஊழல்கள் மற்றும் இலஞ்சங்கள் ஆகியவற்றுக்கு எதிரான விசேட பொலிஸ் குழுவால் கடந்த
நடப்புச் சம்பியனை வீழ்த்திய இந்தியா 90 ஓட்டங்களால் அபார வெற்றி
இந்திய அணி நிர்ணயித்த 171 என்ற ஓட்ட இலக்கை அடைய முடியாத நடப்புச் சம்பியனான இங்கிலாந்து அணியை இந்திய அணி 90 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.
இருபது-20 உலகக் கிண்ண தொடரில் ஏ பிரிவில் இன்று இடம்பெற்ற லீக் போட்டியில் முன்னாள் சம்பியன் இந்தியாவும், நடப்புச் சம்பியன் அணி இங்கிலாந்தும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
அயர்லாந்து மேற்கிந்திய போட்டி மழையால் பாதிப்பு: சுப்பர்8 சுற்றுக்குள் நுழைந்தது மேற்கிந்திய அணி
மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழை காரணமாக முடிவு எட்டப்படாது கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட தனது குழுவில் ஓட்ட சராசரி விகிதத்தில் அயர்லாந்தை விட முன்னிலை பெற்ற மேற்கிந்திய தீவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாத முதல் வாரத்தின் இறுதிப்பகுதியில் டில்லிக்கு விஜயம் செய்யவுள்ளது. இவ் விஜயமானது இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது .
இக்குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அங்கு சந்தித்து சமகால அரசியல் நிலைமை,அரசியல் தீர்வு மற்றும் வடக்கில் இராணுவப் பிரசன்னம் உட்பட பல முக்கிய விடயங்கள்; குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்
இலங்கையின் 18ஆவது கடற்படைத்தளபதியாக ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஜனாதிபதி மகிந்த ராஜபக்~வினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை,இதுவரை காலமும் கடற்படைத் தளபதியாக பதவிவகித்த வைஸ் அட்மிரல் சோமதிலக திசாநாயக அட்மிரல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
யாழ். நெடுந்தீவிற்கு பா.உ சி.சிறீதரன் விஜயம்: மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வ
யாழ்.நெடுந்தீவிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் விஜயம் செய்து, பொதுமக்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்து நெடுந்தீவின் நிலைமை
கண்டி, பல்லேகல விளையாட்டு மைதானத்துக்கு சூட்டப்பட்டிருந்த மலையகத்தின் புகழ் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் தற்போது பாவனையில் இல்லாதிருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ராஜரட்ணம் விசனம் தெரிவித்துள்ளார். மத்திய மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு விசனம் தெரிவித்துள்ளார்.