பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை சமர்ப்பிப்பு
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்று சபாநாயகர் சமல் ராஜபக்~விடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த பிரேரணையை அமைச்சர்களான அருந்திக்க பெர்னாண்டோ, லசந்த அழகியவண்ண மற்றும் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரினால் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இக் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ளவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கவும் தேவையான ஆதரவைப் பெற்றுக்கொள்ள 118 பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அரசாங்கம் கையெழுத்துகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
1 நவ., 2012
செல்வம் எம்.பி.யின் உறவினர் காணவில்லையென முறைப்பாடுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உறவினர் ஒருவரை கடந்த 30 ஆம் திகதி முதல் காணவில்லை என காணாமல் போனவரது மனைவி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறையிட்டுள்ளார்.
தனது மனைவியின் சகோதரரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் (வயது-60) என்பவரே காணமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தனது மனைவியின் சகோதரரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் (வயது-60) என்பவரே காணமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நீதிமன்றம் விஜயகாந்த்துக்கு முன்ஜாமீன் வழங்கியது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 27.10.2012 அன்று செய்தியாளரை அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விஜயகாந்த் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜயகாந்த்துக்கு முன்ஜாமீன் வழங்கியது.
நக்கீரனுக்கு எதிராக மதுரை ஆதினம் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!
மதுரை ஆதினத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களை நக்கீரன் முதல் முதலில் அம்பலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து தன்னைப் பற்றி நக்கீரன் எந்த செய்தியும் வெளியிடக் கூடாது என்று ஒரு சிவில் வழக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
மகளிர் ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 63 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது.
சீனாவில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

(Official Announcement) இளையராஜாவின் ரொறான்ரோ இன்னிசை நிகழ்ச்சி தள்ளி வைப்பு!
‘தென்னிந்தியாவில் கடுமையான புயல் மழை என்று வானிலை மோசமாக இருக்கிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
FULL SCORE CARD-இங்கிலாந்து அணியின் கேப்டன் அலெஸ்டர் குக் சதமடித்தார். அவர் 112 ரன்களுடன் களத்தில் உள்ளார்
இந்திய "ஏ' அணியுடனான பயிற்சி ஆட்டத்தின் 2ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணிக்கு, இந்திய ஏ அணியின் ஸ்கோரை எட்ட இன்னும் 83 ரன்கள் தேவைப்படுகின்றன.மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் நாள் முடிவில் 9

நீலம் புயல் : திருச்செந்தூர், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
மாற்றுப்பாதையில் இயக்கம்
'நீலம்' புயல் - கடந்த 3 நாட்களாக மிரட்டிய இந்த புயல் இன்று மாலை கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயல் கரையை கடக்கும்போது சூறாவளி காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.கோத்தாவிடம் கேள்விகளால் வேள்வி செய்த ரஞ்சன் மத்தாய் |
13 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து அண்மையில் டில்லி சென்ற பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் கேள்விக்கணைகளைத் தொடுத்தார் எனத் தெரியவருகிறது.
கடந்தவாரம் புதுடில்லி சென்ற கோத்தபாய அங்கு உயர்மட்ட இந்திய அதிகாரிகளுடன், பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுகளை நடத்தியிருந்தார். |
யாழில் நடைபெறும் வேலைத்திட்டங்களுக்கு இராணுவமும் பொலிஸாரும் ஒத்துழைப்பு தருகின்றனராம்; புகழாரம் சூட்டுகிறார் அரச அதிபர் |
யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் எம்முடன் இணைந்தே செயற்படுகின்றனர் |
இராணுவத்தினரை சகோதரர்களாகப் பார்க்கிறார்களாம் தமிழர்கள்; கஷ்டப்பட்டு கண்டு பிடித்தார் முதல்வர் |
ஒரு காலத்தில் தமிழர்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த சூழல் மாறி இன்று எம்முடன் இணைந்த சகோதாரர்களாக ஒன்றிப் பிணைந்து வாழும் காலம் உருவாகி விட்டது என யாழ். மாநகர சபை முதல்வர் |
வடக்கில் தொடர்ந்து அடை மழை தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில்
வடக்கில் அடை மழை தொடர்வதனால் தாழ்ந்த நிலப் பகுதிகள் வெள்ளத்தினால் மூடப்பட்டிருக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்றக் கிராமங்கள் பலவற்றில் குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்ததனாலும் காற்றினால் கூரைகள் பறந்து, கூரை விரிப்புகள் காற்றினால் அள்ளிச் செல்லப்பட்டதனாலும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு அருகில் உள்ள பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளன.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு நடவடிக்கைகள்
இன்று நள்ளிரவு முதல் வானொலி பண்பலைகளில் மாற்றம்
இன்று நள்ளிரவு தொடக்கம அனைத்து வானொலி பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் மாற்றப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அணைக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து ஆணைக்குழு தெரிவிக்கையில்,45 வரையான பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளின் அதிர்வெண்களை மாற்றி அமைப்பதுடன் மேற்படி 45 பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் 87.5 தொடக்கம் 108 வரையான மெஹா ஹேட்ஸ் வீச்சில் ஒலிபரப்பு செய்யப்படும்.
உடனடியாக எரிபொருளை இறக்குமதி செய்யவும் : ஜனாதிபதி உத்தரவு
நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து உடனடியாக எரிபொருள் இறக்குமதியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மூன்று சிறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.கடந்த நாட்களில் பெய்த கடும் மழை காரணமாக அதிகரித்த மழை வெள்ளம் ஏற்பட்டதனால் இக்குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கலக்கேணிகுளம் மற்றும் பாலக்கட்டு குளம் என்பனவும் திருகோணமலை வடக்கில் உள்ள வெகட்வெற்றிவேவ என்னும் குளமுமே உடைப்பெடுத்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குளங்கள் மிகவும் அண்மையில் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம்
அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி இப்படியான சம்பவங்களின் சூத்திரதாரிகளை அரசாங்கம் கண்டுபிடித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வன்னியை ஆண்ட கடைசி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு தினமான இன்று புதன்கிழமை நினைவு தினம் மக்களின் வெளிநடப்புக்கு மத்தியியல் இடம்பெற்றது.
நகரசபை தலைவர் ஐ.கனகையா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர் மாலை மாலை அணிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)