புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012

பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம்
அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி இப்படியான சம்பவங்களின் சூத்திரதாரிகளை அரசாங்கம் கண்டுபிடித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருந்தாலும் கடந்த மாகாண சபைத்தேர்தல் காலத்தில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பற்றி தேர்தல் மேடைகளில் பேசியதாகவும் மேடைகளில் அடிக்கடி பிரஸ்தாபித்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் ஆட்சியிலிருக்கும் காலத்தில் இனிமேல் எந்தவொரு பள்ளிவாசல்களும் உடைக்கப்படுவதற்கோ சேதமாக்கப்படுவதற்கோ இடமளிக்கப்போவதில்லையென தெளிவாக கூறியிருந்தார்.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் திடமான முடிவை அவர் கூறியது முஸ்லிம்களுக்கு சந்தோசத்தை கொடுத்தது. இவ்வாறு இருக்கையில் அநுராதபுரம் மல்வத்தஓயா லேன் தக்கியா பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை தீ வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மீது நேரடியாக நாம் குறை கூற முடியாத காரணம் இது யாரோ ஒருவர் செய்த வேலையாகவிருக்கலாம்.

ஆனால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் இதற்கு பிண்ணனி என்ன? இதற்க யார் பொறுப்பு? என்பதை தெளிவாக ஆராய்ந்த மக்கள் முன் தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குரியது. அவ்வாறு செய்தால் தான் மக்கள் இதன் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளமுடியும். இல்லையேல் அரசாங்கத்திற்குத் தெரியாமல் இவ்வாறான சம்பவங்கள் தொடருமானால் இது உண்மையில் அரசாங்கத்திற்கே பாதிப்பாக அமையும்.

குறிப்பாக ஜனாதிபதி பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெறாது என்ற வாக்குறுதிகள் வழங்கிய பின்னர் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை ஆராய்ந்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

ad

ad