புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012

நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான ஒற்றை டி20 போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.
பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக தாமதித்து ஆரம்பித்திருந்தது.

இப்போட்டியில் 16 ஓவர்கள் மட்டுமே வீசக்கூடியதாக அமைந்திருந்தது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் புதிய தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 8.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 24 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது. மீண்டும் போட்டி 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஆரம்பித்தது.
14 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக ரிம் சௌதி ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் பி.ஜே.வற்லிங் 16 ஓட்டங்களையும் ஜேக்கப் ஓரம் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக நுவான் குலசேகர, அகில தனஞ்சய, திஸர பெரேரா தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
டக்வொர்த் லூயிஸ் முறையின் அடிப்படையில் 14 ஓவர்களில் 72 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.
தொடர்ச்சியான மழை காரணமாகப் போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட முடியாததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ad

ad