ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி: ரசிகர்கள் ஆரவாரம்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் இசை நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற பிரமாண்ட இசைநிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
92 கோடி செலவில் கமல் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படம் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. ஏர்டெல், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், சன் டைரக்ட் ஆகிய டி.டி.எச்.களில் வெளியிடப்படுவதாக கமல் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
பாசையூரில் இடம் பெற்ற குழு மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாய மடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் பாசையூரைச் சேர்ந்த அல்பேர்ட் பீரிஸ் கலிஸ் தயான் (வயது23) என்ற இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:
இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தரப்பரீட்சை எழுதுவதற்காக வீடு வந்துள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை
ஐ.சி.சி. 20 ஓவர் பேட்டிங் தரவரிசை: விராட் கோலி 5-வது இடத்திற்கு முன்னேற்றம் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் வாழ்நாளில் சிறந்த நிலையாக, 5-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.
ஈழத்தில் பரிதவிக்கும் விதவைகள்- அனாதை குழந்தைகளுக்கு தமிழக மக்கள் உதவ வேண்டும்: 'சங்கம் 4' விழாவில் ஜெகத் கஸ்பார் பேச்சு
`நாம்' அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. 7-ம் நாள் நிகழ்ச்சியில் "முள்ளி வாய்க்கால் முடிவா, தொடக்கமா?'' என்ற தலைப்பில்
நான்கு வயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் நேற்றுத் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம் பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாயாத்து வழி பிரதான வீதியிலிருந்து விசேட படகுச் சேவை
மன்னார்-சங்குபிட்டி பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்துள்ளமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்த நிலையில் அங்கு கடற்படையினர் விசேட படகுச் சேவை ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் 313 பேர் மீண்டும் சமூகத்துடன்
புனர்வாழ்வளிக்கப்பட்ட 313 முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். அடுத்த மாதம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் வணிகபீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிக்கை வருமாறு:
ஊடகங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி பல்கலைக்கழக சூழலிலும், மாணவர் விடுதிகளிலும் இலங்கை இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து மறுநாள் மாணவர்கள்
ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்ட்ஸியின் குறுக்கே 27 கி.மீ. தூர சுரங்க ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது. இப்பாதையில் ரயில் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.
குபெய் மாகாணத்தின் ஊகான் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, ஊசாங் மற்றும் ஹன்கூ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பாதையை 3 நிமிடங்களில் ரயில்கள் கடந்து விடும். நாள்தோறும்
டொரண்டோ மேயருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றை ஒண்டோரியோ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு மீது $6 மில்லியன் டாலர் தொகைக்கு அவதூறு வழக்கு ஒன்றை ஒரு ரெஸ்டாரண்ட் உரிமையாளர் George Foulidis ஒண்டோரியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கிற்கு போதுமான
தமிழக அணி 27-15 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் தங்கக் கோப்பைக்கான 39-வது தேசிய ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழக அணி 27-15 என்ற புள்ளி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை -5-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. ஆக்கி போட்டி கத்தார் தலைநகர் டோகாவில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் இரவு இறுதிப்போட்டியில் மோதின. தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்த