பெண்கள் யூரோ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்குப் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
-
19 ஜூலை, 2013
நான் இந்தியாவின் தெரிவு அல்ல; விக்னேஸ்வரன் கூறுகிறார்
வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கியமைக்கு இந்தியாவே பின்னணியில் இருப்பதாக வெளியான செய்திகளை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
“பத்திரிகைகளில் வெளியான செய்திகளை நானும் பார்த்திருக்கிறேன். அவற்றில் எந்த உண்மையும் இல்லை. இந்தியாவிலிருந்து எவரும் இது தொடர்பாக கதைத்திருக்கவில்லை.நானும் அங்குள்ளவர்களிடம் இது பற்றிப் பேசியிருக்கவில்லை’ என்று நேத் எப்.எம்.வானொலிக்கு நீதியரசர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நியமித்திருக்கிறது.
ஏற்காடு எம்.எல்.ஏ. சி. மரணம்: முதல்வர் நேரில் அஞ்சலt
சேலம் ஜூலை.19 - சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அதிமுகவின் தீவிர விசுவாசியான அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டி கிராமத்திற்கு நேற்று மாலை நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கச்சத் தீவு விவகாரத்தில் கருணாநிதியின் துரோகங்கள்: பட்டியலிட்டமுதல்வர் கடும் விமர்சனம்
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி தன் ஆட்சிக் காலத்தில் நடந்த கச்சத்தீவு தாரை வார்ப்பைத் தடுக்காமல் தவறவிட்டு, இப்போது நீதிமன்றத்தை நாடியிருப்பதாகச் சொல்வது மக்களை ஏமாற்றும் செயல் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர்
மறைந்த கவிஞர் வாலியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!
பிரபல கவிஞர் வாலி சென்னையில் உடல்நலக் குறைவால் 18.07.2013 வியாழன் மாலை காலமானார்.
மறைந்த வாலியின் உடல் சென்னை, எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வாலியின் மறைவை கேட்டு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.
திரைப்பட இயக்குநர் பாலச்சந்தர், கேமரா மேன் ஸ்ரீராம், இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கைஅமரன், சங்கர் கணேஷ், இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா உட்பட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதிசடங்கு 19.07.2013 வெள்ளிக்கிழமை சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 ஜூலை, 2013
புங்குடுதீவு கண்ணகைபுரம் சிறி இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகாசபைக் கூட்டம்
அண்மைக் காலமாக பாரிய சர்ச்சைக்குளாகி இருக்கும் நிர்வாக,மற்றும் உபயகாரர்கள்,பரம்பரை வழிபாட்டினர்களுக்கிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி ஒரு புதிய நிர்வாகம் தெரிவாகும் எண்ணத்திலா அல்லது வேறு வகையான எதிர்கால வழி கோலல்களுக்காகவா என்று அறிய முடியாத நிலையில் இந்த கூட்டம் அறிவிக்கப் படுலதாக அறிய வருகிறது புங்குடுதீவு கண்ணகைபுரம் சிறி இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகாசபைக் கூட்டம் எதிர்வரும் 22ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இந்து சமய கலாசார திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது இக்கூட்டத்தில் நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகசபை தர்மகர்த்தாசபை தெரிவுகள் இடம்பெறவிருப்பதால் அங்கத்தவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு தர்மகர்த்தாசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.அனைவரதும் கருத்துக்கள் விமர்சனங்கள் பிரசுரமாகும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)