புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2013

நைஜீரியாவில் 44 கிராமத்தினர் கழுத்தறுத்து படுகொலை: தீவிரவாதிகள் அட்டகாசம்

வடகிழக்கு நைஜீரியாவின் கிராமத்துக்குள் புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள் கிராமத்தினர் 44 பேரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்: இத்தாலியில் இலங்கை சிறுமி தற்கொலை
இத்தாலியின் மெஸ்சினா நகரில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 15 வயதான சிறுமி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி தனது ஆசிரியரான 19 வயதான இளைஞருடன் ஏற்படுத்தி கொண்ட காதல் தொடர்பை பெற்றோர் எதிர்த்தன் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் வவுனியா குருமண்காடு கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கில் இன்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
கூட்டமைப்பின் ஐந்து
பிரபாகரன் நடாத்திய வீரம்செறிந்த போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்தது: வீரபுரத்தில் ரதன் முழக்கம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் வடமாகாணசபை வேட்பாளருமாகிய எம்.எம். ரதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் அலுவலகத்தை வீரபுரத்தில் திறந்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு செட்டிகுளம் பிரதேசசபையின் உப தலைவர் எஸ். சந்திரன் தலைமை தாங்கினார்.  இந்நிகழ்வில் அலுவலகத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.



தர்சனானத் பரமலிங்கம் அவர்கள் கூட்டமைப்பு பிரசாரத்துக்கு சென்ற போது அவதானித்தது. எமது மக்களின் தேசிய உறுதி நிலைப்பாட்டை.

இடம்: வடமராட்சி, பருத்தித்துறை தொகுதி, புலோலி காந்தியூர்

இறுதிப் போரில், அமெரிக்கா மரைன் படைகளை அனுப்பி புலித் தலைவர்களை காப்பாற்ற எத்தனித்தது. அந்த திட்டத்திற்கு ராஜபக்ச அரசு எதிர்ப்பு தெரிவித்தது, இந்திய அரசு ஆதரிக்கவில்லை. இந்தியாவின் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்ட நாடொன்றில், அமெரிக்க தலையீடு ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்காவின் திட்டம் நிறைவேறி இருந்தால், இந்தியாவால் எந்தக் காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியாமல் போயிருக்கும்." என்கிறார் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேர்ணல்ஹரிஹரன் தந்தி டிவி நேர்காணலில் கேர்னல் ஹரிஹரன்.

ஆளும் தரப்பின் எடுபிடிகளாக பொலிஸ்! கூட்டமைப்பு வேட்பாளரை கொலை செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரி!

யாழ்.பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிகாரா தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை வேட்பாளர் தம்பிராசா.
குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ்.நகரப்பகுதியினில் தன் மீது நடத்தப்பட்ட சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களது தாக்குதல் பற்றி நியாயம் கேட்கச்சென்றிருந்த வேளையினிலேயே தன்னை கொலை செய்ய அவர் முயற்சித்ததாக தம்பிராசா மேலும்

ஆனந்திக்காக அதிர்ந்த வீரசிங்கம் மண்டபம்!!

யாழ்ப்பாணத்தினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெறப்போகும் ஆசனங்களே அறுதிப்பெரும்பான்மையின்மையினை பெற்று ஆட்சி அமைக்க முடியுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும்.ஆனாலும் இதை செய்ய

26 ஆக., 2013

முள்ளிவாய்க்காலில் முகாம்களை அவசரமாக அகற்றிய படையினர்: நவிப்பிள்ளை வருகையின் எதிரொலி?

இறுதிக்கட்டச் சமர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களை முற்றாக அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக மிகத்
ஐ.நா. அலுவலகம் முன்பாக “இராவணபலய’ ஆர்ப்பாட்டம்; பொலிஸாருடன் முறுகல் 
ஐ.நா. உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து
இலங்கையில் யுத்தம் முடிந்தும் பயங்கரவாதச் சட்டம் ஏன் இருக்கிறது; ஹக்கீமிடம் நவிப்பிள்ளை கேள்வி 
தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்கின்றது அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் ஐ.நா மனித உரிமையாளர்  கேட்டறிந்தார் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சோனியாகாந்தி
மருத்துவமனையில் அனுமதி
 

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  நேற்று இரவு முதல் சோனியாவுக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.  
யாழ் நகரில் தடம் பதித்தார் நவநீதம்பிள்ளை! நாளை கிளிநொச்சிக்கு பயணம்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். 

விசேட விமானத்தின் மூலமாக யாழ் சென்ற ஆணையாளர் 7.00 மணியளவில் தரையிறங்கினார்.
விமானம் மூலம் பலாலி வந்தடைந்த அவர் இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

’தலைவா’ படத்தயாரிப்பாளர் மிரட்டல் :
 சத்யராஜ் பட இயக்குநர் கமிஷனரிடம் பரபரப்பு புகார்
 

‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் ‘கலவரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலக த்தில் ‘தலைவா’ திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். 


               சுஜூத் சர்க்கார் இயக்கிய ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள "மெட்ராஸ் கஃபே' என்ற ஹிந்தி திரைப்படத்தை சென்னையில் வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் தேசிய அமைப்புகளும் ஈழ ஆதரவு அமைப்புகளும் மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றன. கலைஞர், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் படத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 




         ""ஹலோ தலைவரே... கொடநாட்டிலிருந்து  ஜெ. ரிட்டன் ஆன பிறகு எந்த மந்திரிக்குப் பதவி பறிபோகுமோன்னு 32 மந்திரிகளும் திக்..திக் மனநிலை யோடுதான் இருந்தாங்க. ஒருத்தரையொருத்தர் சந்திச்சிக் கிட்டாக்கூட இதைப் பற்றித்தான் பேசிக்கிட்டாங்க. இப்பவும்கூட மந்திரிசபை மாற்றம் பற்றிய தகவல்கள் வந்துக்கிட்டேதான் இருக்குது. ஆனாலும், மந்திரிகள் பலரும் இப்ப பதவி பறிப்பு பயமில்லாம ஓரளவு தைரியமாத்தான் இருக்காங்க. சக மந்திரிகள்கிட்டே பேசுறப்ப, மேலிடம் முன்னே மாதிரி கோபப்படுறதில்லை.. கோபப்பட்டாலும் பதவியைப் பறிக்கிறதில்லைன்னு சொல்றாங்க.''



               89405 55555 -இது ஒரு சாதாரண அலைபேசி நம்பர்தான். ஆனால் இந்த நம்பர் ஒரு மினிஸ்டரின் அரசியல் வாழ்க்கையையே சர்ச்சைக்குரியதாக்கியிருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ... ஆனால் அதுதான் நிஜம்.
தமிழ் மக்களின் தேசிய கடமை
30 வருடங்களாக இந்த நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. போர்ச் சூழல் முற்றாகவே நீங்கி சமாதானமும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது.
 யாழ்ப்பாணத்தில் த.தே.கூவின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் 
வடமாகாண சபைத் தேர்தக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்  யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இலங்கையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற சம்பந்திகள் போல் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும். அப்போது தான் இன மத தீவிரவாதம் தகர்த்தெறியப்படும் நல்லுறவு நிலவும்.
இவ்வாறு கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் சனியன்று இடம்பெற்ற சர்வமத தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய நுவரெலியா மாவட்டம் சார்பில் பேசிய வண. குசலஞான தேரர் தெரிவித்தார்.

ad

ad