யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் இன்று பாரிய பேரணிகள்! [Saturday 2025-08-30 07:00] |
![]() சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (30) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன |
-
30 ஆக., 2025
செம்மணியில் இதுவரை 187 எலும்புக்கூடுகள் அடையாளம்- நேற்றும் 10! [Saturday 2025-08-30 07:00] |
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. |
28 ஆக., 2025
ஆளுநர்களின் நிர்வாகத்தை விட அரசியல்வாதிகளின் நிர்வாகம் 100 வீதம் சிறந்தது! [Thursday 2025-08-28 19:00] |
![]() எல்லை நிர்ணய குழுவொன்றை மீண்டும் நியமித்தால் மாகாண சபைத் தேர்தலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் நடத்த முடியாத நிலை ஏற்படும். அரச அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர்களின் நிர்வாகத்தை காட்டிலும் அரசியல்வாதிகளின் நிர்வாகம் நூற்றுக்கு நூறு சதவீதம் சிறந்தது. தேர்தலை பிற்போடுவதற்காகவே எல்லை நிர்ணய குழு நியமிக்கப்படும். தேர்தலை பிற்போட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் குழுவை சவாலுக்குட்படுத்துவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார் |
தம்பிலுவில் மயானத்தில் மீண்டும் அகழ்வு! [Thursday 2025-08-28 19:00] |
![]() கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன |
செம்மணியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! ![]() [Thursday 2025-08-28 19:00] |
![]() யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. |
ஜனாதிபதி அனுரவின் உள்நாட்டுப் பயண விபரங்களை வெளியிட மறுப்பு! [Thursday 2025-08-28 19:00] |
![]() ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உள்நாட்டு பயணம் குறித்த தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுத்துவிட்டது. தகவல் அறியும் உரிமைகோரிக்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் பதிலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜினாத் பிரேமரத்னவால் ஆகஸ்ட் 4 ஆம் திகதி கேட்கப்பட்ட கேள்விகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5(1)(b)(i) இன் கீழ் ஆகஸ்ட் 27 ஆம் திகதி முறையாக நிராகரிக்கப்பட்டது |
ரணிலுக்காக எந்த இராஜதந்திரியும் வரவில்லை! [Thursday 2025-08-28 06:00] |
![]() முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர நிறுவனமோ எவ்வித நிலைப்பாட்டையும் வெளியிடவில்லை என சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். |
நயினாதீவு, பூநகரி, மணல்காடு, ஆழியவளைக்கு மேலாக சூரியன் இன்று உச்சம்! [Thursday 2025-08-28 06:00] |
![]() சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று நண்பகல் 12.11 அளவில் நயினாதீவு, பூநகரி, மணல்காடு மற்றும் ஆழியவளை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. |
26 ஆக., 2025
செம்மணி குறித்த சர்வதேச விசாரணை கோரி 29ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம்! [Tuesday 2025-08-26 07:00] |
![]() செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29 ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது |
ஒருகட்சி ஆட்சிமுறையை ஏற்படுத்த என்பிபி அரசு முயற்சி! [Tuesday 2025-08-26 07:00] |
![]() நாட்டில் நடைமுறையிலுள்ள பல கட்சி ஆட்சி முறைமையை ஒழித்து ஒரு கட்சி ஆட்சியை நிலைநிறுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார போக்கினை தடுப்பதற்காகவே இன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி கூறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். |
பிள்ளையானின் சகாக்கள் தொடர்ந்து கைது- கிரானில் சிக்கினார் சின்னத்தம்பி! [Tuesday 2025-08-26 07:00] |
![]() மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பிள்ளையானின் சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது. |
25 ஆக., 2025
கறுப்பு ஜுலை, நூலகம் எரிப்பு, படுகொலைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் ரணில்! [Sunday 2025-08-24 18:00] |
![]() ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார். |
23 ஆக., 2025
மோசமடையும் ரணிலின் உடல்நிலை.. சிங்கப்பூர் கொண்டு செல்ல ஆலோசனை
மனைவிக்கு புற்றுநோய், ரணிலுக்கு விளக்கமறியல்- அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சிகள்! [Saturday 2025-08-23 07:00] |
![]() முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, பிணை கோரி மனு தாக்கல் செய்தார் |
ரணிலுக்கு 26ஆம் திகதி வரை விளக்கமறியல்! ![]() [Saturday 2025-08-23 07:00] |
![]() குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது. நேற்று இரவு நீதிமன்றத்தில் நடந்த நீண்ட வாதங்களை அடுத்து, விக்ரமசிங்க ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் |
22 ஆக., 2025
சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்! [Friday 2025-08-22 07:00] |
![]() ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின்கீழும் பாதுகாப்புப்படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்மீது இன்னமும் அத்துமீறல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது |
பாரபட்சமற்ற பன்னாட்டு சுயாதீன பொறிமுறையை நிறுவக் கோரி ஜெனிவாவுக்கு கடிதம்! [Friday 2025-08-22 07:00] |
![]() இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய நிரந்தர மற்றும் அவதானிப்பு நாடுகளின் அங்கத்துவர்களுக்கும் தமிழ் தரப்பில் இருந்து மற்றொரு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது |
ஹர்த்தால் விவகாரத்தால் மட்டக்களப்பு மாநகர சபையில் வாக்குவாதம்! [Friday 2025-08-22 07:00] |
![]() நடந்து முடிந்த ஹர்தாலின் போது மாநகரசபை முதல்வரை தேசிய மக்கள் சக்தி சில மாநகர சபை உறுப்பினர்கள் திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக மாநகர சபை அமர்வில் கவனத்தில் கொண்டு வந்ததையடுத்து தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு இடையே பெரும் அமளிதுளி இடம்பெற்றுள்ளது. |