-
12 டிச., 2022
தோல்வியுறாத அணியாக தொடரில் முன்னேறும் கண்டி பல்கொன்ஸ்
குர்பாஸ், அவிஷ்க அபாரம் ஜப்னா கிங்ஸ் அடுத்த வெற்றி
பிரித்தானியாவில் உறைந்த ஏரிக்குள் தவறி விழுந்த சிறுவர்கள்: மீட்க போராடும் மருத்துவர்கள்!
![]() பிரித்தானியாவில் சோலிஹல் பகுதியில் அமைந்துள்ள ஏரியில், தவறி விழுந்த நான்கு சிறுவர்கள் உயிருக்கு போராடுவதாகவும், இருவர் இன்னும் மாயமாகியுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட நால்வரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்து போன Babbs Mill ஏரியில் 6 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. |
இலங்கை இராணுவ அதிகாரிக்கு அமெரிக்க விதித்துள்ள தடை
![]() த நேஷன் என்ற ஆங்கில பத்திரிகையின் துணை ஆசிரியராக கடமையாற்றிய கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்து தாக்குதல் நடத்தியமை சம்பந்தமான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரியான மேஜர் பிரபாத் புளத்வத்தவுக்கு அமெரிக்க தடைகளை விதித்துள்ளது |
சென்னை - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை ஆரம்பம்! Top News [Monday 2022-12-12 16:00]
![]() சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை இன்று ஆரம்பமாகியது. முதலாவது விமானம் இன்று முற்பகல் 11.20 மணியளவில் பலாலி விமானநிலையத்தில் தரையிறங்கியது |
வடக்கிற்கு விமானம் மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர நடவடிக்கை
![]() வடக்கு ரயில் பாதை ஜனவரியில் தற்காலிகமாக மூடப்படுவதால், விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது |
பிரதேச சபை சாரதியை துரத்தித் துரத்தி வாள்வெட்டு!
![]() முல்லைத்தீவு- முறிகண்டி பகுதியில் கடமையிலிருந்த பிரதேச சபை சாரதி ஒருவர் மீது காலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது |
ஈபிடிபி பிரதேச சபை உறுப்பினர் வாள்கள், கூரிய ஆயுதங்களுடன் கைது!
![]() வலிகாமம் மேற்கு பிரதேச சபையின், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இன்று வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கரத்தை துணவி பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். |
இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை!
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார் |
வடக்கு உள்ளிட்ட 4 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க முடிவு!
![]() வடக்கு உட்பட நான்கு மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்களை விரைவில் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளார் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. நியமிக்கப்படவுள்ள நான்கு ஆளுநர்களில் முன்னாள் அமைச்சர்களும் அடங்குகின்றனர் என்றும் கூறப்படுகின்றது. |
மேய்ச்சல் தரை இல்லை! PHIஇற்கு தகவல் வழங்கும் அயல்வீட்டார் - மாடுகளை இழந்த நபரின் ஆதங்கம்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் உயிரிழந்தன.
காரில் தொங்கிய படி பயணம்: மேயரின் விருப்பமா? நேயரின் விருப்பமா? தமிழிசை சவுந்தரராஜன்
குஜராத் சென்ற ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தார்
11 டிச., 2022
கூகுள் தேடலில் வடக்கின் பெரும் சாதனை!
![]() கூகுள் தேடல் பொறியில் செக்ஸ் என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. |
பாடசாலை விடுமுறை நாட்கள் குறைப்பு!
![]() அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் சராசரியாக பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய நாட்கள் 210 என்று குறிப்பிட்டார். அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். அடுத்த வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் அனைத்து தரங்களுக்குமான பாடத்திட்டங்களையும் உள்ளடக்குவதே இலக்காகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். |
யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்
![]() போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் இன்று அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது |
செவ்வாய் மாலை சர்வகட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு - புறக்கணிக்கிறது சைக்கிள்!
![]() தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் பேச்சை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார் |
200 பில்லியன் ரூபாவுக்கு நகைகளை அடகு வைத்த இலங்கையர்கள்!
![]() நாடளாவிய ரீதியில் கடந்த 10 மாதங்களில் சுமார் 40 இலட்சம் பேர் சுமார் 200 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார் |