![]() கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலின் பின்னர், 35 முதல் 40 கைதிகள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது |
-
25 ஜன., 2024
கந்தகாட்டில் மீண்டும் பதற்றம் - மோதலை அடுத்து 40 கைதிகள் தப்பியோட்டம்
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலி! Top News
![]() கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் |
24 ஜன., 2024
பெலியத்த படுகொலைகள் - முக்கிய சூத்திரதாரி கைது
![]() பெலியத்தவில் திங்கட்கிழமை ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அதற்குப் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. |
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது
![]() பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. |
ஆனையிறவில் அதிகாலையில் கோர விபத்து! - ஒருவர் பலி, 8பேர் காயம்.
![]() கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் |
23 ஜன., 2024
21 ஜன., 2024
வித்தியா கொலை வழக்கு - மேன்முறையீட்டு மனுக்கள் நாளை விசாரணை
![]() யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது |
19 ஜன., 2024
யாழ்ப்பாணத்தில் தமிழர் பெருவிழா
![]() யாழ்ப்பாணத்தில் தமிழர் பெருவிழா , யாழ்ப்பாணம் சர்வோதய மண்டபத்தில் ஜனவரி 20 முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. |
ஜனாதிபதி தேர்தலுக்கு ஏற்பாடுகள் தொடங்கின
![]() ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துவருவதாக ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார் |
அரசின் செயற்பாடுகளை ஜெனிவாவில் அம்பலப்படுத்துவோம்
![]() மார்ச் மாதம் இடம்பெறும் மனித உரிமை பேரவையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை அம்பலப்படுத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் |
யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கினால் மேலும் இருவர் மரணம்
![]() யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தார். பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது |
ஸிம்பாப்வேயுடனான கடைசிப் போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்ற இலங்கை தொடரையும் கைப்பற்றியது
சுமந்திரன் தலைவரானால் தமிழரசில் தமிழ்த் தேசியம் அழிந்து விடும்
![]() சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சியில் இருந்து தமிழ்த் தேசியம் இல்லாது போய்விடும் என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார் |
18 ஜன., 2024
15 நாட்களில் 1 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்
![]() இந்த வருடன் நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. |
மஹிந்தவுடன் இணையத் தமிழர்கள் தயார் இல்லை!
![]() முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க தமிழர்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தயாராக இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார் |
முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை முதலில் நடைமுறைப்படுத்துங்கள்
![]() இலங்கை அரசாங்கம் மற்றுமொரு உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கு முன்னர் கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது |