செவ்வாய், ஜூலை 23, 2013

தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு
தாய்த்தமிழகமாம் திண்டுக்கல் மாவட்டத்தில் M.R.F நகரில் வசிக்கும் தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு உலகதமிழர் பேரமைப்பின் கொடி அணிவித்து பொதுமக்களின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.
யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை
தரித்து நின்ற வாகனத்தை அடித்து சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவக இளைஞர் அணித் தலைவரும் மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினருமான நிசாந்தன் சற்றுமுன் யாழ். நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
யாழில் பேரூந்துக்காக காத்து நின்ற இளம் பெண்ணை முத்தமிட்ட முதியவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம் பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதுடன் அப்பெண்ணை முத்தமிட்ட முதியவரை இங்கு கூடியிருந்தவர்கள் அடி உதை கொடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், ஆசனப் பங்கீடுகள் விபரம்!
வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.
கொழும்பில் மினி சூறாவளி: பல வீடுகள், வாகனங்கள் சேதம் - ஒருவர் பலி
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
டி சேரம், தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மின்சார தடையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நடிகை மஞ்சுளாவுக்கு திரையுலகம் அஞ்சலி
 


நடிகை மஞ்சுளா(வயது 60)  சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று(23.7.2013) மரணம் அடைந்தார்.