புதன், ஜூன் 03, 2015

கட்டுநாயக்க கொலை விவகாரத்தில் அம்பலமாகும் கோத்தாபாய அந்தரங்கம். - See more at: http://www.canadamirror.com/canada/44026.html#sthash.BMV2PVNv.dpuf

Rosan
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்பட்டிருந்த ரொஷான் சானகவின் இறுதிக்கிரியையை,
கோத்தபாயவின் ‘எவன்கார்ட்’ நிறுவனமே நடத்திய விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
2011 இல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரொஷான் கொல்லப்பட்டிருந்தார். பொலிசாரின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருந்தார். இதனையடுத்து, அங்கு மக்களின் எதிர்ப்பு வலுவடைந்தது.
மக்களின் எதிர்ப்பை அடக்குமுறையின் மூலம் மகிந்த ராஜபக்ச அரசு கட்டுப்படுத்தியது.
இதற்கு எவன்கார்ட் நிறுவனத்தை பயன்படுத்திய விவகாரமும் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. கொல்லப்பட்டவரின் சகோதரன் இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
ஊழியர்களின் எதிர்ப்பை அடக்க பொலிசார் நடத்திய தாக்குதலில் ரொஷான் கொல்லப்பட்டிருந்தார். இதனை அடக்குவதற்கு மகிந்த அரசு தனது வழக்கமான பாணியை கடைப்பிடித்தது.
ரொஷானின் இறுதிஊர்வலத்திற்கு நீதிமன்றத்தின் மூலம் கட்டுப்பாடு விதித்தது. அச்சுறுத்தல் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை பணியச் செய்தது. எனினும், இந்த மரணம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
ரொஷானின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடிக்கலாமென நினைத்த அரசு, நீதிமன்றத்தின் மூலம் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ரொஷானின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த பின்னர், நூற்றுக்கணக்கான அதிரடிப்படையினர், அந்த வீட்டை முற்றுகையிட்டிருந்தனர்.
மரணச்சடங்கின் முதல்நாள், தேவாலயத்தை விட வேறெங்கும் உடலை கொண்டு செல்ல முடியாதென்றும், ஒரு மதகுரு மற்றும் ஒரு நண்பரின் உரைக்கு மட்டுமே நீதிமன்றத்தின் மூலம் அனுமதியளித்தது.
அது தவிர, மக்கள் போராட்டம் வெடிக்கக்கூடாதென்பதற்காக அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.
இது தவிர, மரணச்சடங்கில் அரசிற்கு எதிரான போராட்டங்கள் நடந்து விடக்கூடாதென்பதற்காக, மரணச்சடங்கையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இதற்காக கோத்தபாயவின் சொந்த பாதுகாப்பு நிறுவனமான எவன்கார்ட் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் படையினர் உள்ளிட்ட பலர் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் சிவிலுடையில்- கொல்லப்பட்ட ரொஷானின் உறவினர், நண்பர்களை போல கலந்து கொண்டு, அனைத்து காரியங்களையும் செய்துள்ளனர்.
அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இறுதிச்சடங்கு உள்ளிட்ட அனைத்தும் நடந்ததாக ரொஷானின் சகோதரர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
சவப்பெட்டியை தூக்கிச் சென்றதும் அவர்கள்தான்.
இதுவொரு மோசமான அடக்கமுறை, இதுவரை அதுபற்றி வாய் திறக்க முடியாமல் இருந்தேன் என கூறும் சகோதரர், புதிய அரசு அதுபற்றிய விசாரணையை நடத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.