புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2016

கட்டிங் எந்திரம் கொண்டு ரெயில் பெட்டியில் துவாரம் போட்டுகொள்ளையடித்துள்ளனர்: ரெயில்வே ஐ.ஜி.


சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

ஓடும் ரெயிலில் கொள்ளை சம்பவம் நடந்தது எப்படி? என்பது குறித்து ரெயில்வே ஐ.ஜி.ராமசுப்பிரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்முறையாக இதுபோன்று ரெயில் பெட்டி மேற்கூரையை துவாரம் போட்டு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. திட்டம் போட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்.

ரெயில் பெட்டியில் பாதுகாப்புக்காக வந்த போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. சேலத்தில் புறப்பட்ட இந்த ரெயில் வழியில் 10 இடங்களில் நின்று உள்ளது. எனவே இந்த 10 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.  அங்கு இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம்.

கட்டிங் எந்திரம் கொண்டு ரெயில் பெட்டியில் துவாரம் போட்டு, இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். ரெயிலில் கொண்டு வரப்பட்ட பணம் உண்மையான பணமாக இருக்கலாம் என்று கொள்ளையர்கள் கருதி இருக்கலாம். கிழிந்த, பழைய நோட்டுகள் என்று தெரியவந்ததும் 4 பெட்டிகளை உடைத்து பார்த்துவிட்டு, அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர் என்றார்.

ad

ad