புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012

கருணாவின் சகோதரி வரலாறு காணாத படுதோல்வி
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 11 வேட்பாளர்களில் முன்னாள்
முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டுமே இம்முறை வெற்றி பெற்றுள்ளார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள 35 பேரில் 15 பேர் முஸ்லிம்கள். தமிழர்கள் 12 பேரும் சிங்களவர்கள் 8 பேரும் இம்முறை மாகாண சபைக்கு இன ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 11 வேட்பாளர்களில் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டுமே இம்முறை வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 31 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்ட போதிலும் முன்னாள் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.சுபைர், எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் விமலவீர திசாநாயக்க உட்பட 13 பேரே மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா உட்பட 18 பேர் தோல்வியடைந்துள்ளார்கள். இவர்களில் 6 பேர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட, பிரதியமைச்சர் கருணாவின் சகோதரியான ருத்ரமலர் ஞானபாஸ்கரன் படுதோல்வியடைந்துள்ளார். இவரே முதலமைச்சருக்கு பொருத்தமானவர் என பிரதியமைச்சர் கருணா பிரசாரக் கூட்டங்களில் முழக்கமிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வந்துள்ளது.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதியை வழங்கினால் தமது கட்சி தமிழ்க் கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ad

ad