புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்
சாம்பியன்ஸ் லீக் 20ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது லீக் போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார்.
 
டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்ட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 குவித்தது.
 
பின் 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. முதல் ஓவரே கொல்கத்தாவிற்கு அதிர்ச்சி அளிக்கும்படி அமைந்தது. காம்பீர் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் ஆனார். அடுத்து பிஸ்லா 1 ரன்னில் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்த ஓவரை மோர்னே மோர்கல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மெக்கல்லம் ரன் ஏதும் எடுக்காமல்  அவுட்டானார். அடுத்து வந்த காலிஸ் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.
 
இதனால் கொல்கத்தா அணி நெருக்கடிக்கு உள்ளானது. அதன்பின் வந்த திவாரி, பதான் மற்றும் பாடியா ஓரளவுக்கு விளையாட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 108 ரன் எடுத்தது. இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 58 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ad

ad