புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012


யாழில் உள்ள ஐந்து தீவுகளுக்கு சூரிய மற்றும் காற்று மூலம் சக்தியினை வழங்க நடவடிக்கை

வட மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து தீவுகளுக்கு சூரிய மற்றும் காற்று மூலமான சக்தியினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்திற்கமைய 2013 ஆம் ஆண்டு இறுதிக்குள் நெடுந்தீவு, ந
னாதீவு, அனலைதீவு, நாகதீபம் மற்றும் எழுவைதீவு ஆகிய தீவக மக்கள் மின்சக்தியி னை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆரம்ப கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமுல்படுத்தப்படும் போது தீவுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 குடும்பத்தவர்கள் பயனடைவர் என மின்சக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த தீவுப் பிரதேச மக்கள் அனல் மின்நிலையத்தின் ஊடான மின்சாரத்தினையே பெறுவதாக அவர், பூகோள ரீதியாக இந்த பிரதேசத்திற்கு சூரிய மற்றும் காற்று மூலமான மின்விநியோகம் சிறப்பாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ad

ad