புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் டைட்டான்ஸ் அணி 39 ரன்னில் பெர்த் ஸ்கோர் செர்ஸ் அணியை வென்றது. 2-வது ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 52 ரன்னில்
அபார வெற்றி பெற்றது. 

முதலில் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பையை இந்திய அணி வெல்ல காரணமாக இருந்த உன்முகுத்சந்த் அதிகபட்சமாக 40 ரன் எடுத்தார். அவர் 27 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். ரோஸ் டெய்லர் 24 பந்தில் 36 ரன் எடுத்தார். சுனில் நரீன் 3 விக்கெட்டும், எல்.பாலாஜி 2 விக்கெட்டும் எடுத்தனர். 

பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி, டெல்லி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் நிலைகுலைந்தது. அந்த அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 108 ரன்னே எடுக்க முடிந்தது. மனோஜ் திவாரி அதிகபட்சமாக 33 ரன் எடுத்தார். இர்பான்பதான், மார்னே மார்கல், உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். 

இந்த வெற்றி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே கூறியதாவது:- 

சாம்பியன்ஸ் லீக் போட்டியின் தொடக்கமே சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு ஏற்றவகையில் எங்களது ஆக்ரோஷம் இருந்தது. ஒவ்வொரு வரும் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினர். 
உன்முகுத்சந்த் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவரது ஆட்டத்தில் மிகுந்த முதிர்ச்சி தென்பட்டது. நாங்கள் 10 முதல் 15 ரன்களை வரை குறைவாகவே எடுத்தோம். ஆனால் பந்து வீச்சாளர்கள் மிகவும் பந்துவீசி வெற்றிக்கு காரணமாக விளங்கினார்கள். ஆடுகளத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பாக வீசினார்கள். இதே மாதிரி இனிவரும் போட்டிகளில் ஆடவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

தோல்வி குறித்து காம்பீர் கூறும்போது, சில சமயம் போட்டி எப்படி வேண்டுமானாலும் அமைந்துவிடும். தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்து விட்டதால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. இர்பான்பதான், மார்னே மார்கல் உள்ள டெல்லி வீரர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசி எங்களை நிலைகுலைய வைத்துவிட்டனர் என்றார். 

டெல்லி அணி 2-வது ஆட்டத்தில் ஆக்லாந்து ஆசஸ் அணியை 19-ந்தேதி எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணி அடுத்த ஆட்டத்தில் ஆக்லாந்து ஆசஸ் அணியை நாளை (திங்கட்கிழமை) எதிர்கொள்கிறது.

ad

ad