புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012




யாழ்ப்பாணத்துக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் நேற்று விஜயம் செய்த போது, அவர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பலாலி விமானத்தளத்திலிருந்து துரையப்பா விளையாட்டரங்கை நோக்கி புறப்படத் தயாரானபோதே இந்த இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ரக உலங்கு வானூர்தி பலாலி விமான நிலையத்திலிருந்து துரையப்பா விளையாட்டு அரங்கை நோக்கிப் புறப்பட ஆயத்தமானபோது, அதன் பின்பகுதி நிலத்துடன் உராய்ந்து கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து யாழ் விஜயம் மேற்கொண்ட பீரிஸ் குழுவினருக்கு திட்டமிட்டு, பீதியை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விக்ள எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏனெனில், பீரிஸின் யாழ். விஜயம் மஹிந்த குடும்பத்தின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. விபத்தின் பின்னரே மஹிந்த சகோதரர்களுக்கு விடயம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் விசேட இராணுவ அணியொன்றின் மூலம் ஹிங்குராக்கொடவிலிருந்து மற்றுமொரு உலங்கு வானூர்தி வரவழைக்கப்பட்டு அதில் அமைச்சர் பீரிஸும் ஏனைய அதிகாரிகளும் யாழ். துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad