புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012

மிகச் சிறந்த இணையத்தளமாக வீரகேசரி இணையத்தளம் தெரிவு
இலங்கை .lk ஆள்களப் பதிவகம் நடத்திய 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த இணையத்தளத் தெரிவுப்போட்டியில் சிறந்த தமிழ் இணையத்தள விருது வீரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இணையச் செய்தியாக்கத்துக்கான வெண்கல விருதினையும் வீரகேசரி தனதாக்கிக்கொண்டது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

இலங்கையில் .lk ஆள்களப் பதிவகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களுக்கிடையில் கடந்த மாதம் இறுதி மூன்று வாரங்கள் போட்டி நடைபெற்றது.

உள்ளடக்கத் தகவல்களின் தரம், இணையத்தள மேம்பாடு, வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் துறைசார் நிபுணர்களால் கண்காணிக்கப்பட்டு மத்தியஸ்தம் வழங்கப்பட்டதுடன் வாசகர்களின் வாக்கெடுப்பும் நடைபெற்றது.

துறைசார் நிபுணர்களின் மத்தியஸ்தம் மற்றும் வாக்கெடுப்பின் அடிப்படையில் வெற்றிபெற்ற இணையத்தளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம் வீரகேசரி இணையத்தளத்துக்கு இரண்டு விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் யாழ் மண் இணையத்துக்கு மிகச் சிறந்த தமிழ் இணையத்தள பிரிவில் திறமைச் சான்றிதழ் கிடைத்துள்ளதுன் வீரகேசரி, யாழ்மண் இணையத்தள மேம்படுத்துநர் சி.சி.பிரசன்னாவுக்கும் திறமைச் சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி இணையத்தள வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி தொடர்ச்சியாக ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கு இணையத்தள ஆசிரிய பீடம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

ad

ad