புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012


ரூ.127 கோடி ஊழல் பணத்தில் அரண்மனை கட்டும் தென் ஆப்பிரிக்க அதிபர்

NICE COMMENT
Sunday, October 14,2012 04:32 PM, ss said:00
பிழைக்க தெரியாத அதிபர்...நம்ம மஞ்ச துண்டுகிட்ட கேட்டா ஒருலட்சம் கோடி எப்படி அடிக்கிறதுன்னு சொல்லி தருவார்...!!!

ரூ.127 கோடி ஊழல் பணத்தில் அரண்மனை கட்டும் தென் ஆப்பிரிக்க அதிபர்
தென் ஆப்பிரிக்கா நாட்டின் அதிபராக ஜேக்கப்ஷுமா (64) பதவி வகிக்கிறார். இவருக்கு 4 மனைவிகள் உள்ளனர். இவர் குவாசுலு நடால் மாகாணத்தில் உள்ள காண்ட்லா என்ற கிராமத்தில் தனக்கு சொந்தமாக பிரமாண்டமான அரண்மனை கட்டி வருகிறார். 



இதில், அவருக்கும், அவரது மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கும் தனித்தனி அறைகள், அலங்கார சொகுசு பாத்ரூம்கள் உள்ளன. மேலும், அவரது பாதுகாவலர்களுக்கு 10 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. 

சுரங்க பாதைகளுடன் கூடிய தரை தளமும், ஹெலிகாப்டர் தளமும் இங்கு உள்ளன. இந்த அரண்மனை சுமார் ரூ.127 கோடி செலவில் கட்டப்படுகிறது. இது ஊழல் பணத்தில் கட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

வரி செலுத்தும் நிறுவனங்களுக்கு சலுகை காட்டி அவர்கள் தந்த லஞ்ச பணத்தின் மூலம் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதை அதிபர் ஷுமாவும் அவரது உதவியாளர்களும் மறுத்துள்ளனர். இந்த அரண்மனை ஷுமாவின் குடும்ப உறுப்பினர்களால் கட்டப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ad

ad