மாதகல்லில் மேலும் ஒருதொகுதி மக்களை மீளக்குடியமர்த்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
வலிதென்மேற்கின் மாதகல் பகுதியில் மேலும் ஒரு தொகுதி மக்களை மீளக்குடியேற்றுவதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மாதகல் பகுதிக்கு இன்று புதன்கிழமை (17.10.2012) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மக்கள் விடுத்த கோரிக்கைக்கமைவாக அப்பகுதி கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதையடுத்து மாதகல் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.

இதன் பிரகாரம் கீரிமலை பொன்னாலை வீதியின் வடக்கு புறமாகவுள்ள கடற்கரைப்பகுதியின் 2கி.மீ நீளமான நிலப்பரப்பில் மக்களின் மீள் குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மாதகல் பண்டத்தரிப்பு வீதியின் மேற்குப் புறமாகவுமுள்ள நுணசை பாடசாலைக்கும் முருகன் கோயிலுக்கும் இடைப்பட்ட வயற்காணி உள்ளடங்களான குடியிருப்பு காணியின் ஒன்றரை கி.மீ பகுதியிலும் மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
இன்மூலம் சுமார் 150 குடும்பங்கள் வரை எதிர்வரும் 22ஆம் திகதி மீள் குடியமரவுள்ள நிலையில், தமது மீள் குடியேற்றத்தில் விரைவான நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
இதன்போது நுணசை பாடசாலைக்கு கிழக்குப் புறமாகவுள்ள ஏனைய பகுதியை 03 மாதங்களுக்குள் மக்கள் குடியேற துறைசார்ந்தோரூடாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார்.
இச்சந்திப்பின்போது அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா, வலி தென்மேற்கு பிரதேச செயலர் முரளிதரன், பகுதி கடற்படை அதிகாரிகள், வலிகாமம் ஈ.பி.டி.பி அமைப்பாளர் பாலகிருஸ்னன், மானிப்பாய் ஈ.பி.டி.பி அமைப்பாளர் ஜீவா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.