புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2012


வழக்கை விசாரிக்க வேண்டாமெனக்கோரி அமைச்சர் ரிசாட் மனு தாக்கல்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான ரிசாட் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க வேண்டாம் எனக் கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று
மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 
 

மன்னார் நீதிவான் ஏ.யூட்சன் மீது அச்சுறுத்தல் விடுத்தமை, மன்னார் மாவட்ட நீதிமன்றம் மீதான தாக்குதல் மற்றும் நீதிமன்றத்தை அவமதித்த ஆகிய குற்றச்சாட்டுகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது சுமத்தியே மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி விசாரிப்பதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 5 ஆம் திகதி தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad