புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2012


100 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டமைக்கு இலங்கை விளக்கமளிக்க வேண்டும்!- ஸ்பெயின் தூதுவர்
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று திங்கட்கிழமை உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட 210 பரிந்துரைகளில் இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட 100 பரிந்துரைகளுக்கும் இலங்கை விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஸ்பெயின் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
உறுப்பு நாடுகளினால் நகல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் கருத்துரைத்த இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, எதிர்வரும் 2 வாரத்தில் இலங்கையின் சுயாதீன உறுதியுரையொன்றை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டார்.
போருக்கு பின்னர் அபிவிருத்திகள் தொடர்பாக இலங்கை, மனிதவுரிமைகள் ஆணையகத்திடம் தொடர்ந்து அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்..
உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட 100 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டமைக்கு இலங்கை விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஸ்பெயன் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கியுபா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தமது பரிந்துரைகள் எவ்வாறான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
கடந்தவாரம் இலங்கை தொடர்பில் அழுத்தத்தை பிரயோகித்து வந்த இந்தியா நேற்று அமைதியான போக்கை கடைபிடித்ததுடன், பரிந்துரைகள் எதனையும் முன்வைக்கவில்லை.

ad

ad