புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2012


திவிநெகும சட்டமூலம்:

2/3 பெரும்பான்மை மற்றும் திருத்தங்களுடன் நிறைவேற்றுமாறு உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

சரத்து 8 (2) அரசியலமைப்புக்கு முரண் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறும் தீர்ப்பு
திவிநெகும திணைக்கள சட்டமூலத்தை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்கள் சகிதம் 2/3 பெரும் பான்மையுடன் நிறைவேற்ற முடியுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
வட மாகாண சபை ஸ்தாபிக்கப்படாத நிலையில் அரசியலமைப்பின்
82 ஆவது சரத்தின் படி இதனை 2/3 பெரும் பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள் ளது.
திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டிருந்த வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளு மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்றத்தில் அறிவித்த சபாநாயகர் மேலும் கூறியதாவது:
ஏதும் சட்டமூலத்தை ஒழுங்குப் பத்திரத்தில் சேர்ப்பதற்கு முன்னர் அது அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதை ஆராய்ந்து தீர்ப்பு வெளியிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே உள்ளது. வட மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டிராத நிலையில் அதன் கருத்தை பெற முடியாதுள்ளது. இந்த நிலையில் அரசியலமைப்பின் 82 சரத்தின் படி இதனை 2/3 பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேற்ற வேண்டும்.
அரசியலமைப்பின் 12 (1) சரத்தின் படி சட்ட மூலத்தின் 5 ஏ பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானதாகும். எனவே இதனை 2/3 பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்ற வேண்டும்.
சட்ட மூலத்தின் 4, 42 ஆம் பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது என்பதால் அதனையும் 2/3 பெரும் பான்மை வாக்குகளால் நிறைவேற்ற வேண்டும்.
(2) சரத்து அரசியலமைப்பின் 3 ஆவது பிரிவுக்கு மாற்றமானது என்பதால் இதனை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அனுமதியைப் பெற வேண்டும். திணைக்கள வலய தலைவர்கள் அமைச்சரவையினூடாக நியமிக்கப்படுவதாயின் அது அரசியல் யாப்பிற்கு முரணானதல்ல. அதன்படி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை.
சட்ட மூலத்தின் 11 மற்றும் 18 ஆம் பிரிவுகள் அரசியலமைப்பிற்கு மாற்றமானது. எனவே, இதனை 2/3 பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்ற வேண்டும். இதன் 14 ஆவது பிரிவு யாப்புக்கு முரணான போதும் திவிநெகும திணைக்கள பணிப்பாளர் திவிநெகும மக்கள் சங்க நிர்வாகம், கண்காணிப்பு என்பன தொடர்பில் வலய அமைப்புகளின் கருத்தறிந்து செயற்படுவதனால் அது அரசியலமைப்புக்கு முரணானது.
சட்ட மூலத்தின் 17 (1) பிரிவு யாப்புக்கு மாற்றமானது. எனவே, அரசியலமைப்பின் 84 (2) சரத்தின் படி இதனை 2/3 பெரும் பான்மை பலத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
சட்ட மூலத்தின் 19 ஆவது பிரிவு அரசியலமைப்பிற்கு மாற்றமானது. இதனையும் 2/3 பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேற்ற வேண்டும்.
திவிநெகும சட்ட மூலத்தின் 25 (4), 29 (4) பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனையும் 2/3 பெரும்பான்மை வாக்குகள் மூலம் நிறைவேற்ற முடியும்.
சட்ட மூலத்தின் 5 ஏ இல் உள்ள சில பகுதிகள் யாப்புக்கு மாற்றமானது நிதி மற்றும் சொத்துக்களை பாராளுமன்ற அனுமதியுடன் கூட்டு நிதியத்தில் வைப்புச் செய்வதாயின் இதனை யாப்புக்கு உட்பட்டதாக்க முடியும்.

ad

ad