புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2012


ஜெ.,வுக்கு குமரி அனந்தன் பாராட்டு மழை: கலைஞர் தாக்கு
முதல்வர் ஜெயலலிதாவை குமரி அனந்தன் பாராட்டியிருப்பது குறித்து திமுக தலைவர் கலைஞர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட
கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில், ’’இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், நீண்ட நாள் காங்கிரஸ்காரர். அவர் அந்தக் கட்சியில் வகிக்காத பதவிகள் கிடையாது. சிறந்த பேச்சாளர். எழுத்தாளர். நான் முதல் அமைச்சராக இருந்த நிலையில், என்னைச் சந்தித்தபோதும், பல நிகழ்ச்சிகளிலும், கடிதங்களிலும் பாராட்டிப் பேசாத வார்த்தைகளே இல்லை.


பனை வெல்லத்தைப் பற்றி ஒவ்வொரு முறையும் பேசத் தவறிய தில்லை. நான் அவரது உழைப்பைப் பாராட்டி பனைமரத் தொழிலாளர் நலவாரியத்தின் தலைவராகவே நியமித்தேன். அந்தப் பணியையும் அவர் திறம்பட நடத்தி; தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கொண்ட 33 ஆயிரத்து 416 தொழிலாளர்களில் 7 ஆயிரத்து 401 பணியாளர்களின் குடும்பங்களுக்கு 1 கோடியே 55 இலட்சத்து 49 ஆயிரத்து 745 ரூபாய் உதவித்தொகை கழக ஆட்சியில் வழங்கப்பட்டது.
 ஆனால் இந்த ஆட்சியில் அப்படி ஒரு வாரியம் செயல்படுவதாகவே தெரியவில்லை. மற்ற நல வாரியங்களைப் போலவே இந்த வாரியத்தின் செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. 
அம்மையாருக்குப் பாராட்டு மழை பொழிந்திருக்கும் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், தற்போது அம்மையார் ஆட்சியில் பனை மரத் தொழிலாளர் நல வாரியத்திற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும் என்பதற்காக கோரிக்கை வைத்திருந்தால், பயனுள்ளதாக இருந்திருக்கும்’’என்று கூறியுள்ளார்.

ad

ad