புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2012


நல்லிணக்க பரிந்துரைகள் தொடர்பாக இலங்கையில் ஐ.நா. ஆய்வு: ஸ்டாலினிடம் நவநீதம்பிள்ளை தகவல்
நல்லிணக்க பரிந்துரைகள் தொடர்பாக வரும் ஜனவரி மாதம் இலங்கையில் ஆய்வு மேற்கொள்ளப் போவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அதன் தலைவர் நவநீதம்பிள்ளையை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

அப்போது, டெசோ மாநாட்டு தீர்மானங்கள் அடிப்படையில், திமுக தலைவர் கருணாநிதி கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையை அவரிடம் கொடுத்தனர்.

சுமார் 35 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடைபெற்ற போரில் 90 ஆயிரம் பேர் விதவைகளாக்கப்பட்டு, பரிதாப நிலையில் இருக்கின்றனர்.

தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

போரின் போது வீடுகளை விட்டு ஓடிவிட்டதாக அறிவிக்கப்பட்ட 1,25,000 தமிழர்களை மீண்டும் அவர்கள் பகுதிகளில் குடியமர்த்த வேண்டும் என ஸ்டாலின் எடுத்துரைத்தார். ஸ்டாலின் அளித்த ஆவணங்கள் முக்கியமானவை என்று நவநீதம் கூறினார்.

மேலும், இலங்கை போர்க் குற்றங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையப் பரிந்துரைகள் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்தத் தீர்மானம் அமெரிக்கா கொண்டுவந்து இந்தியா ஆதரித்ததாகும். இது எந்தளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூலம் ஆய்வு செய்ய உள்ளோம்.

என் (நவநீதம்) தலைமையில் குழு ஒன்று ஜனவரி மாதம் இலங்கைக்குச் சென்று மேற்பார்வையிடும் என்று நவநீதம் கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ad

ad