புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2012



இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் சுதிர் ஷர்மா என்பவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பிரமாண்ட துர்கா கோவிலை உருவாக்க உள்ளார்.

ஆஸ்க் 4 குழும தொழில் நிறுவனங்களின் தலைவரான சுதிர் ஷர்மா, தனது பிரமாண்ட திட்டம் குறித்து கூறியதாவது:-

வெளிநாட்டில் இந்திய பக்தி கலாச்சாரத்தை பரப்புவதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு வைஷ்ணவி தேவி கோவில் புனித யாத்திரை எனக்கு ஊக்கம் அளித்தது. அதன்படி சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ள லங்கர்ன் என்ற கிராமத்தில் ஜெய் அம்பாள் பள்ளத்தாக்கு என்ற பெயரில் பிரமாண்ட கோவில் நகரை அமைக்க உள்ளோம்.

ரூ.2326 கோடி மதிப்பீட்டில் உருவாகும் இந்த நகரத்தில், கோவில் மட்டுமல்லாமல் சுற்றுலா கல்வி நிறுவனம், ஓட்டல்கள், உணவு விடுதிகள், வங்கிகள், மருத்துவ வசதி மற்றும் பக்தர்களுக்கான பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.

இந்த கோவில் கட்டுமானப் பணிகள் ஒரு வருடத்தில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்த திட்டப்பணிகளும் முடிய 6 வருடங்கள் ஆகும்.

இந்த திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு முதலில் அனுமதி வழங்க மறுத்தது. பின்னர் சமாதானம் ஆகி அனுமதி அளித்தது. கோவிலுக்கான இறுதி கட்டமைப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad