புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2012

”சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 700 பேரின் வங்கிக்கணக்கு
 குறித்த விபரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. இந்த பட்டியலை வெளியிட அரசிடம் உள்ள ஒரு சிலர் என்னிடம் கொடுத்துள்ளனர். அதன்படி சுவிஸ் வங்கியில் சுமார் 700 இந்தியர்கள் ரூ.6000 கோடி அளவுக்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

“”நாடே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள போது, சுமார் 700 இந்தியர்கள் ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் வெறும் ரூ.6000 கோடியை பதுக்கியுள்ளனர். இந்த பட்டியல் மத்திய
அரசிடமும் உள்ளது. ஆனால் இதுவரை ஏன் இவர்கள் நிறுவனங்களில் சோதனை நடத்தப்படவில்லை. நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய அரசு குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக ஊக்கப்படுத்துகிறது”" என்று தெரிவித்துள்ளார் ஜெஜ்ரிவால்.

ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவரான கெஜ்ரிவால் ஏற்கனவே மத்திய அமைச்சர் குர்ஷித் மற்றும் பா.ஜனதா தலைவர் கட்காரி மீது ஊழல் குற்றச்சாட்டை வெளியிட்டு அதிர வைத்தார்.அதே சமயம் இவருக்கு ஆண்டுதோறும் 25 லட்சம் கொடுத்து வந்தேன் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் கூறியிருந்தார். அதற்கு பதிலோ அல்ல்து விளக்கமோ கொடுக்காத நிலையில் இன்று சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியின்போது,””சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 700 பேரின் வங்கிக்கணக்கு
 குறித்த விபரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. இந்த பட்டியலை வெளியிட அரசிடம் உள்ள ஒரு சிலர் என்னிடம் கொடுத்துள்ளனர். அதன்படி சுவிஸ் வங்கியில் சுமார் 700 இந்தியர்கள் ரூ.6000 கோடி அளவுக்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் சுவிஸ் வங்கியில் தலா ரூ.100 கோடியை பதுக்கி வைத்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி. அனு டான்டனுக்கும், ராகுல் காந்தியின் நண்பர் சந்தீப் டாண்டனும் சுவிஸ் வங்கியில் தலா ரூ.125 கோடி உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாயை வெளிநாட்டில் பதுக்கியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நரேஷ் கோயல் ரூ80 கோடியும், டாபர் நிறுவன அதிபர் பர்மன் ரூ,26 கோடியும், மோடெக் சாப்ட்வேர் நிறுவனம் ரூ.2100 கோடியும் வைத்துள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியல் மத்திய அரசிடமும் உள்ளது. ஆனால் இதுவரை 150 பேரிடம் மட்டுமே சோதனை நடத்தப்பட்டுள்ளது. மற்றவர்களின் நிறுவனங்களில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை? மத்திய அரசு கறுப்பு பணம் பதுக்குவதை ஆதரிக்கிறது.

குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக ஊக்கப்படுத்துகிறது. கறுப்பு பணத்தை பதுக்குவதற்கு உதவி செய்த எச்.எஸ்.பி.சி. வங்கியும் குற்றவாளிதான். கறுப்பு பணம் வைத்திருப்பவர்களால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி விளக்குவேன். மத்திய அரசில் புதிதாக அமைச்சராக பதவியேற்றிருக்கும் அமைச்சர் ஒருவர், ராபர்ட் வதேராவை நான் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என விரும்புகிறார். ””என்று கெஜ்ரிவால் கூறினார்.

ad

ad