-

9 நவ., 2012

கவுதமாலா நாட்டில் ஏ‌ற்ப‌ட்ட பய‌ங்கரமானநிலநடுக்க‌த்தா‌ல் க‌ட்டிட‌ங்க‌ள் இடி‌ந்து ‌விழு‌ந்து 48 பே‌ர் ப‌லியா‌‌கியு‌ள்ளன‌ர். பல‌ர் இடிபாடுக‌ளி‌ல் ‌சி‌க்‌கியு‌ள்ளதா‌‌ல் உ‌‌யி‌ர் ப‌லி அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன அ‌ஞ்ச‌ப்படு‌கிறது.இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகபதிவானது. இதனால் ஏற்பட்ட நிலசரிவைதொடர்ந்து மக்கள் அதிர்ச்சிக்குஉள்ளாகினர்.


மெக்சிகோ நாட்டை ஒட்டியுள்ள மலைபிரதேசமான கவுதமாலாவில் இருமாகாணங்களில் நிலநடுக்கத்தின் பாதிப்புஉணரப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டுவெளியேறி சாலைகளில் நின்றனர்.

இந்த நிலநடுக்கத்தினால் 48 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள்காயமடைந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.

இதில், சான் மார்கோஸ் மாகாணத்தில் 40 பேரும், குவிட்சால்டெனன்கோமாகாணத்தில் 8 பேரும் பலியாகியுள்ளனர் என்று அதிபர் மொலீனாதெரிவித்தார். மேலும், மணல் குவாரி ஒன்றில் சிக்கியுள்ள 8 பேரைமீட்பதற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவஇடத்திற்கு விரைந்து உள்ளனர்.

ad

ad