புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2012


நிலத்திலும் புலத்திலும் போராடிய வீரத்தளபதி பரிதி!! டென்மார்க் வாழ் தமிழமக்களின் வீரவணக்கம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முகமாக 25 வருடங்களுக்கும் மேலாக மக்களோடு மக்களாய்  நின்று நிலத்திலும் புலத்திலும் களமாடிய மாவீரர்  பரிதி  சிறீலங்கா  அரசின் புலனாய்வுத்துறையின்  நயவஞ்சகச்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று மாலை வீரமரணம் தழுவிக் கொண்டார்  .

முள்ளிவாய்க்காலில் தமிழினம் முடிந்தது என்று கங்கணம் கட்டிய சிங்களத்துக்கு புலம்பெயர் நாட்டில் பொங்கி எழுந்த இனமான ஈழத்தமிழர்களின்  முகமாக விளங்கியவர்  தான் மாவீரர்  பரிதி .
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தூணாக துணிவுடன் சிறை சென்றும் விடுதலையை மூச்சாக கொண்டு அயராது போராடிவர் தான்  மாவீரர்  பரிதி .சிங்கள அரசின் கைக்கூலிகள் பலதடவை மாவீரர் பரிதியை கொல்வதற்கு முயற்சித்து வந்தது அனைவரும் அறிந்தவிடயம் . அவ் வகையில் இன்று மாவீரர்  பரிதி அவர்கள் சிறீலங்கா அரசின்  புலனாய்வுத்துறையின் திட்டமிட்ட நயவஞ்சகச் செயலால் வீரமரணம் அடைந்ததை அறிந்து எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது , முழு உலகமுமே கவலை கொள்ளலாம் கண்டனங்கள்  தெரிவிக்கலாம் , கண்ணீர் வடிக்கலாம் .ஆயினும் , எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது விடுதலையை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு , விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது எனும் தேசியத் தலைவரின் கட்டளைக்கு செயல்வடிவம் கொடுத்த மாவீரன் பரிதியின் நினைவுகள் அணையாச் சுடராக, விடுதலைத் தீயாக தொடரும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்  என்பது நிச்சயம் .
மாவீரர் பரிதி அவர்களை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
Share

ad

ad