புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2012

லண்டன் மேடையிலிருந்துஸ்டாலின் கீழே இறங்கினார்.மூன்று தமிழ் பெண்கள் மறித்துக் கொண்டார்கள்.

. ஜெனிவா சென்று ஐ.நா பொறுப்பாளரை சந்தித்து “கருணாநிதி” தந்த மடலை கொடுத்துவிட்டு, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் “நவநீதம் பிள்ளையையும்” சந்தித்து பேசிவிட்டு, அடேயப்பா, எவ்வளவு கடின வேலைகள்? உடன் சென்ற டி.ஆர் பாலு
அந்த பிரமுகர்களிடம் விவரமாக பேசியதையும் காட்சி ஊடகங்களில் கண்டோம்.
லண்டன் மாநாட்டில் ஸ்டாலின் பேசினார். ஈழச் சூழல் பற்றி பேசினார்.
ஒன்றரை லட்சம் பேர் கொலை செய்யப்பட்டதை பேசினார்.
தொண்ணூறு ஆயிரம் பேர் தமிழ் பெண்கள் விதவைகளாக இருப்பதை பேசினார்.
போர் குற்றங்கள் பற்றி பேசினார். இவையெல்லாம் ஸ்டாலினுக்கு ஏற்கனவே தெரியுமா? தெரிய வேண்டிய அவசியமில்லை.
இப்போது பேசினார். பேசிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினார்.
மூன்று தமிழ் பெண்கள் மறித்துக் கொண்டார்கள்.
நீங்கள் பேசியது எல்லாம் சரி. இவையெல்லாம் நாங்கள் போர் நடக்கும் போதே கூறினோமே?
நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீர்கள்? அப்போது உங்கள் தந்தை முதல்வராக இருந்தாரே?
நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்களே? அப்போது பேசி இருந்தால் பலன் கிடைத்திருக்குமே?
போர் குற்றங்கள் நின்று போயிருக்குமே? அப்போது பேசாமல் இப்போது பேசி என்ன பயன்? இவ்வாறு கேட்டார்கள்.
பதில் சொல்ல முடியாமல் “எப்போ பேசறது? எப்ப பேசறது? என்று திணறினார் ஸ்டாலின்.
டி .ஆர்.பாலுவும், கே.எஸ்.ராதாகிருஷ்ணனும், அந்த பெண்களுக்கு சமாதானம் கூறி அனுப்பி விட்டனர்.
அருகே இருந்த திருமாவளவன் ஒன்றும் குறுக்கிட்டு பேசவில்லையே? என்று ஸ்டாலினுக்கு வருத்தமாம்.
அருகே கோ.க.மணியும் தான் இருந்தார்.
அவர்களுக்கு அந்த பெண்கள் கேட்பது நியாயம் தான் என்று தெரியுமே?

ad

ad