புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2012


புலிகள் தளபதி பரிதி கொலையினை விசாரிக்க பிரான்ஸ் அரசு முடிவு!-தமிழீழ அரசு அழுத்தம்
தமிழ் பேசும் உளவுத்துறையினரும் குறித்த நாட்டின் அரசின் கீழ் களம் இறக்கப்பட்டுள்ளனர்
தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டநாள் உறுப்பினரும் தேசிய தலைவரின் மிக நெருக்கமான சகாவுமான ரீகன் என அழைக்கபடும் பரிதி Nadarasa Mathendharan alias Parithi அவர்கள் கடந்த இரவு பத்து மணியளவில் இவரது அலுவலகத்துக்கு முன் வந்து உந்துருளியில் காத்து நின்ற இரு மர்ம நபர்கள் இவரை சுட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தற்போது இவரது கொலையினை அடுத்து பிரான்ஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரித்து வரும் நிலையில் சிங்கள கூட்டு கூலிப்படை கொலையாளிகளை கைது செய்யும்படி கோரியும்,
குறித்த படுகொலையினை இரு குழுக்களுக்குள் இடம்பெற்றது எனக் கோரி முடக்கிவிட வேண்டாம் எனக் கோரியும்,
துரித விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் குற்றவாளிகள் கைது செய்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்களை தடுக்க கோரியும்,
பிரான்சின் உள்துறை அமைச்சிடமும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடமும் நாடு கடந்த தமிழீழ அரசின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
சிங்கள உளவாளிகள் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள விரிசலை பயன்படுத்தி மேலும் குழுவாத அடிப்படையில் முட்டி மோதும் கும்பல்களுக்குள் மேலும் விரிசலை உருவாக்கும் நோக்குடன் இந்த படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
தற்போது பிரான்சிலும் ஐரோப்பாவில் உள்ள சில தமிழ் ரவுடி கும்பல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் பல நகர்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தமிழ் பேசும் உளவுத்துறையினரும் குறித்த நாட்டின் அரசின் கீழ் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இவ்விதமான ஒரு தாக்குதல் சம்பவம் பிரித்தானியாவின் கிளை பொறுப்பாளர் தனம் மீதும் நடத்தப்பட்டது.
இந்த கொலை அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு மிரட்டலாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தீவிர விசாரணைகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
இவருக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் அனைத்தும் ஆராயப்படுகின்றன.
கோழைகளின் இந்த வெறியாட்டத்தை கண்டு தமிழினம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

ad

ad