புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2013


இலங்கைக்கு எதிரான பிரேரணைகளைத் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கத் தயார்!- ரஷ்ய தூதுவர்
ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் அனைத்து பிரேரணைகளையும் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான ரஷ்யாவின் புதிய தூதுவர் அலெக்ஸாண்டர் ஏ. கர்ச்சாவா தெரிவித்துள்ளார்.
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் பிரதமர் D.M. ஜயரத்னவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமைகளை மீறியுள்ளதாக மேற்குலக நாடுகளால் இலங்கை மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கையின் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் நிரந்தர அங்கத்துவம் தற்போது ரஷ்யாவிற்கு இல்லாவிடினும் மேற்குலக நாடுகள் சிலவற்றினால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படுகின்ற அனைத்து பிரேரணைகளையும் தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டதாகவும் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ரஸ்யா மத்தியஸ்தராக செயற்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு விநியோகிக்க ரஷ்யா முன்வந்துள்ளது.
இதற்கமைய நான்கு ஹெலிகொப்டர்களும் பல்வேறு உபகரணங்களும் இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு விநியோகிக்கப்படும் என இலங்கைக்கான ரஷ்யாவின் புதிய தூதுவர் அலெக்ஸாண்டர் ஏ. கர்ச்சாவா தெரிவித்துள்ளார்.

ad

ad