புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2013


போராட்டத்தைக் கைவிடக் கோரும் கலைஞர் : எழுச்சியை தடுக்க முனைவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!


இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று
திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருக்கிறார். இக்கோரிக்கையானது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் தங்கள் அரசியல் நலனுக்காக ஈழமக்கள் விடயத்தைக் கையெலெடுத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள சூழ்நிலையில் அரசியல் சாராமல் ஈழத் தமிழ் மக்கள்பால் உண்மையான அக்கறையுடன் லயோலாக் கல்லூரி மாணவர்கள் தொடங்கியுள்ள போராட்டமானது அரசியல் இலாபத்துக்காக ஈழத்தமிழர் பிரச்சனையைக் கையிலெடுத்திருக்கும் சில அரசியல் தலைவர்களை கிலிகொள்ள வைத்துள்ளது.
மாணவர்களின் போராட்டமானது தங்களது அரசியல் இலாப நட்டக் கணக்குடன் முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தை மழுங்கடித்து தமிழகத்தில் ஒரு நிஜ எழுச்சியை ஏற்படுத்திவிடும் என்று பயப்படும் ஒரு அரசியல் தலைவரின் அறிக்கையாகவே கலைஞரின் அறிக்கை அமைந்துள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் கலைஞரின் அரசியல் உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட மாணவர்கள் மறுத்துள்ளனர். 2009-ம் ஆண்டு இதேபோல் தமிழகம் முழுவதும் மாணவர்கள் கொந்தளித்து கிளர்ந்த போது அதை அடக்கி ஒடுக்கியவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். எங்களது போராட்டத்தை இப்போதும் அப்படி ஒடுக்கிவிடாதீர்கள் என்று கொந்தளித்தார் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களில் ஒருவர்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த்தமிழகமே ஒன்றாகத் திரண்டுள்ளது என்பதை நிரூலபிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.அந்த வரிசையில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், கறுப்புச்சட்டை அணிந்து 8.3.2013 காலை 10.30 மணி அளவில் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே ஒன்று திரண்டு கையில் ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளைச் சித்தரிக்கும் படங்கள் மற்றும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையிலே ஏந்தி, ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
அவர்கள் அங்கே பேசும்போது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக மாணவர்கள் எந்த அளவிற்கு தீவிரம் காட்டினார்களோ, அதே தீவிரத்தை ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காட்டுவதாக இருக்கிறோம் என்றும், மத்திய அரசு கோரிக்கைக்கு இணங்கி வராவிட்டால், அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.லயோலா கல்லூரி மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஈழத் தமிழர் பிரச்சினையை முன்வைத்து 7.3.2013 காலை 10 மணி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்துள்ளது.
ஈழத் தமிழர்களைக் காக்க தாய்த்தமிழகத்திலே உள்ள ஒவ்வொரு இளைஞர்களுடைய உயிரும் முக்கியம் என்பதை உணர்ந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் என்பதை மாற்றிக் கொண்டு வேறு வகை அறப்போராட்டங்களில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது பிரச்சினைக்கு மேலும் ஆக்கத்தைத் தரும் என்பதால், உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ad

ad