புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2013


வவுனியா உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று மக்களுக்கு உதவாத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மீது ஓழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த 6ம் திகதி கொழும்பில் நடைபெற்ற காணாமல் போன உறவுகளின் ஆர்பாட்டத்திற்கு என வவுனியாவுக்கு வருகை தந்த 800க்கு மேற்பட்ட மக்களை கொழும்பு செல்லவிடாது பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் 5ம் திகதி மதியம் தொடக்கம் வருகை தந்த மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் 06ம்திகதி மதியம் வரை வவுனியா நகரசபை மைதானத்திலேயே தங்கினர்.
மலசலகூடத்திற்கு நீர் இன்றி மக்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கியபோதும் அது தொடர்பாக தெரிந்தும் வவுனியா நகர சபையால் நீரை விநியோகிப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் 5 கிலோமீற்றர் தொலைவில் இருந்த வவுனியா தமிழ்த் பிரதேச சபையிடம் இருந்தே நீரைப் பெற வேண்டி ஏற்பட்டது.
பம்பைமடுப் பிரதேசத்தில் தங்கியிருந்த மக்களை ஏற்றுவதற்கு நகரசபையிடம் வாகனம் கேட்கப்பட்டபோதும் அவர்கள் மாறிமாறி இழுத்தடிப்புக்களை செய்தனர்.
மக்களை அவசரமாக ஒன்றினைக்க வேண்டி ஏற்பட்டதனால் வாகனத்தை நகரசபையிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வன்னிமாவட்ட பாராழுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் ஆகியோர் வவுனியாநகர சபைத் தலைவர் ஜ.கனகையாவிடமும் நகரசபை செயலாளரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலமுறை கேட்டும் இழுத்தடிப்பு செய்து இறுதியில் வாகனத்தை பயன்படுத்துவதற்கான பணத்தினை செலுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சென்ற போதே இரண்டு மணித்தியாலங்கள் கழித்து வாகனம் வழங்கப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களே அதிருப்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மக்கள் தங்குவதற்கு உரிய முறையில் மண்டபம் உள்ளிட்ட எந்தவொரு ஒழுங்கையும் செய்வதற்கு வவுனியா நகர சபையும் உறுப்பினர்கள் தயக்கம் காட்டியமை உறவுகளை இழந்து துன்பத்தில் இருந்த மக்களுக்கு மேலும் துன்பத்தை தந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியாது இரவு பகலாக இருந்த மக்களை வவுனியா நகர சபையைச் சேர்ந்த தலைவர், உபதலைவர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் வந்து பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நகரசபையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் அவ்வப்போது தலையை காட்டி விட்டு மயமாகியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நகரசபைத் தலைவர் நகருக்கு வந்து சென்றபோதும் சம்பவ இடமாகிய தனது அலுவலகத்துக்கு வரவில்லை. இதேபோன்று உபதலைவர் சம்பவ தினத்தில் தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்துக்கொண்டு இருந்தார் என நேரில் கண்ட மக்கள் தெரிவிக்கின்றனார்.
வவுனியா பிரதேசபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கூட இதேநிலை தான் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். பிரதேச சபையைச் சேர்ந்த இருவர் அவ்வப்போது மதுபோதையில் வந்த சென்றனர்.
எனவே பாராளுமன்ற உறுப்பினர்களது கருந்துக்களையும் கேட்காது தமது சபை மைதானத்தில் தங்கியிருந்த மக்கள் தொடர்பாக கவனம் செலுத்தாமை என்பன தொடர்பாகவும் அவர்களது அசமந்த போக்கு தொடர்பாகவும் வவுனியா உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மீது ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்கமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராழுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது,
காணாமல்போன உறவுகளின் குடும்பங்களும் உறவினர்களும் வவுனியாவுக்கு வருகை தருவதால் அவர்கள் தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும். இதனால் எல்லா உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு தான் தொலைபேசியில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியதாக தெரிவித்ததுடன், இந்த மாத இறுதிக்குள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள உள்ளூராட்சி சபைகளை கண்காணிப்பதற்கு ஒரு குழுவை அமைக்கவுள்ளதாகவும் அதன் மூலம் சிலர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ad

ad