புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2013



போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி இலங்கை தமிழர் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை: சவேந்திர சில்வா

இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை நடத்தக் கோரி, 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்தவொரு இலங்கை தமிழரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை
என்று கூறியுள்ளார் ஐ.நாவுக்கான இலங்கை பிரதி தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.

விடுதலைப் புலிகளின பிடியில் இருந்து தப்பித்து அமைதி மற்றும் உறுதித்தன்மையை அனுபவித்துக் கொண்டு அரசியல் நோக்கத்துடன் சில சக்திகள் இலங்கை அரசாங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவளிக்கக் கோரி தமிழ்நாட்டில் மணி என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலைகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக முனையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மிகுந்து செயற்திறனுடன் இயங்குவதாகவும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், கொமன்வெல்த் மாநாடு ஆகியன நடக்கவுள்ள நேரத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

எனினும், பெரும்பாலான தமிழ்மக்களிடம் இது எடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து வடக்கில் எந்தவொரு எதிர்ப்புப் போராட்டமும் இடம்பெறவில்லை என்றும் அவர்கள் சுதந்திரமாக வாழவே விரும்புவதாகவும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
.

ad

ad