புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013


2013-14  ஆண்டில் மேலும் 35 லட்சம் பேருக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி

2013-14-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்தார்.
 
பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
விலையில்லா மிக்சிகள், கிரைண்டர்கள் மற்றும் மின் விசிறிகள் வழங்கும் முன்னோடித் திட்டம், வீட்டு வேலைப் பளுவிலிருந்து பெண்களை விடுவித்துள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் மின்விசிறிகளுக்குப் பதிலாக மின் அடுப்புகள் விநியோகிக்கப் பட்டு வருகின்றன.
 
2011-2012-ம் ஆண்டில், இந்த அரசு 1,361.62 கோடி ரூபாய் செலவில் 25 லட்சம் உபகரணத் தொகுப்புகளை வழங்கியது. 2012-2013-ம் ஆண்டில் 1,556 கோடி ரூபாய் செலவில் 35 லட்சம் உபகரணத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
 
2013-2014-ம் ஆண்டில், மேலும் 35 லட்சம் உபகரணத் தொகுப்புகளை இந்த அரசு விநியோகிக்கும். இதற்காக 2013-2014-ம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
முதல்-அமைச்சர் அறிவித்துள்ளவாறு பலவகையான உணவு வகைகள், சத்துணவுத் திட்டத்திலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திலும் மாவட்டந்தோறும் ஒரு வட்டாரத்தில் சோதனை முறையில் வழங்கப்படும். 2013-14-ம் ஆண்டில் 53.53 லட்சம் குழந்தைகளுக்குப் பயனளிக்கும் வகையில் சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்திட இந்த அரசு 1,492.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
 
மேலும் 2013-2014-ம் ஆண்டில் 359.70 கோடி ரூபாய் செலவில் 14,130 மதிய உணவு மையங்களில் சமையலறை, இருப்பு அறைக்கான கட்டிடம் கட்டும் பணிகளை இந்த அரசு தொடங்கி செயல்படுத்தும்.
 
சென்னை, வேலூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் சோதனை முறையில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வண்ண உடைகள் வழங்குவதற்கான திட்டம் 2012-2013-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. 2013-2014-ம் ஆண்டில் விழுப்புரம், அரியலூர், பெரம் பலூர், நாகப்பட்டி னம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
 
இந்த வரவு- செலவுத் திட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள் வழங்குவதற்காக 4.30 கோடி ரூபாய் ஒதுக் கப்பட்டுள்ளது. 2013-2014-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த குழந்கைதள் வளர்ச்சித் திட்டத்திற்காக 1,320.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் போன்ற திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 2010-2011-ம் ஆண்டில் 23.71 லட்சமாக இருந்தது. இது 2012-2013-ம் ஆண்டில் 30.72 லட்சமாக உயர்ந்துள்ளது.
 
இத்திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடு 2010- 2011-ம் ஆண்டில் 1,207.32 கோடி ரூபாயாக இருந்தது. 2013-2014-ம் ஆண்டிற்கு இது 3,461.75 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
 
கடும் ஊனமுற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கு வதற்காக, 2013-2014-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 131.05 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 2013-2014-ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் 263 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
நலவாரியங்களின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வங்கிக் கணக்குகள் மூலமாக நேரடியாக மின்னணுப் பரிமாற்றம் மூலம் வழங்குவதற்கான முயற்சி, சோதனை முறையில் ஆறு மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

ad

ad