புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013


17 வயது இளம் விலைமகளுடன் உறவுகொண்ட சுவிஸ் வங்கி அதிகாரி!


சிங்கப்பூரில் நடந்த பாலியல் குற்றத்திற்காக சுவிஸ் வங்கி அதிகாரி ஜீவர் பூவர்கின்(Juerg Buergin) மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து வருகின்ற செவ்வாய் கிழமையன்று விசாரணை தொடங்கவுள்ளது.

சிங்கப்பூரில் பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18 ஆகும். ஆனால் 17 வயதுப்பெண் தனக்கு பதினெட்டு வயது என்ற பொய் சொல்லி இணைய தளத்தில் தன் பாலியல் தொழிலுக்காக விளம்பரம் செய்துள்ளாள்.
விளம்பரத்தைப் பார்த்த பலர் அவளை அணுகியுள்ளனர். தற்பொழுது வயது குறைந்த பெண்ணுடன் உறவு கொண்ட குற்றச்சாட்டுக்காக இவரோடு சேர்ந்து இன்னும் 50 ஆண்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட 51 பேரில் பல தலைமை நிர்வாகிகள், முன்னாள் பள்ளி முதல்வர், கப்பல் கப்டன், பொலிஸ் கண்காணிப்பாளர், ஏஷியன் மூவியின் தலைவருடைய பேரனும், சுற்றுச்சூழல் சமூகநலப் பணியாளருமான ஹோவார்ட் ஷா(Howard Shaw) போன்றோரும் உள்ளனர்.
ஹோவார்ட் ஷாவுக்கு இவ்வழக்கில் 12 வாரம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவரது நன்னடத்தை காரணமாக எட்டு வாரங்களில் விடுதலையாகியுள்ளார்.
சுவிஸ் வங்கி அதிகாரி பூவர்கின் மட்டுமே வழக்கை எதிர்த்து வாதாடி வருகிறார். அப்பெண்ணின் வயது 17 என்று தனக்கு தெரியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை 18 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad