புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2013


வயலின் மேதை லால்குடி ஜெயராமன் காலமானார்
 


பிரபல வயலின் மேதையும், இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.

பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர். சிருங்காரம் எனும் தமிழ் படத்திற்கு இசையமைத்ததற்காக தேசிய விருது கிடைத்தது. வாத்திய சங்கீத கலாரத்னா விருது வழங்கியது பாரதி சொசைட்டி நியூயார்க்.
சங்கீத சூடாமணி விருது இசை சபாக்களின் கூட்டமைப்பு மெட்ராஸ். மாநில வித்வான் விருது, இசைப்பேரறிஞர் விருது, சௌடையா நினைவு தேசிய அளவிலான விருது ஆகியவைகளையும் பெற்றுள்ளார்.

புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார் லால்குடி ஜெயராமன். 
லால்குடி கோபால அய்யர்-சாவித்ரி தம்பதியினரின் மூத்த மகனாக 1930 செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார். அம்மாவின் அர்ப்பணிப்பும் ஆசிர்வாதமுமே தன் புகழுக்குக் காரணம் என்பார். தந்தை கோபால அய்யர், வயலின் உட்பட பல்வேறு வாத்தியங்களில் விளையாடுவதிலும், வாத்தியங்களை உருவாக்குவதிலும் கைதேர்ந்தவர். ஆனால், தன் வித்வத் திறமையை மக்களிடம் இவர் கொண்டுசென்றது இல்லை.
ஜி.என்.பி., செம்மங்குடி அரியக்குடி, மதுரை மணி, மதுரை சோமு, ராம்நாடு கிருஷ்ணன், ஆலத்தூர் சகோதரர்கள், பாலமுரளி கிருஷ்ணன், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், மகாராஜபுரம் சந்தானம் என பல இசை சிகரங்களின் கச்சேரிகளைத் தன் வயலினால் அழகுபடுத்தியவர்.
தந்தை கோபால அய்யர்தான் லால்குடி ஜெயராமனின் குரு, நாலு வயதில் இருந்தே அதிகாலை 3 ½ மணிக்குத் தொடங்கும் சாதகம் காலை 9 மணி வரை தொடருமாம். `அந்த கடினப் பயிற்சிதான் தன்னை ஒரு வடிவத்தில் பொருந்தியது’ என்று தெரிவித்துள்ளார்.
இவரின் மூன்று சகோதரிகளும் இசைக் கலைஞர்களே. பத்மாவதி வீணைக் கலைஞர், ராஜலட்சுமி, ஸ்ரீமதி இருவரும் வயலின் கலைஞர்கள். தன் சிறு வயதில் இருந்தே ஸ்ரீமதியுடன் சேர்ந்து நிறைய டூயட் கச்சேரிகள் வாசிக்கத் தொடங்கினார் லால்குடி ஜெயராமன்.
லால்குடியின் வயலினும் பேசும்’ என்பார்கள், ஆம், இவரது தனிக் கச்சேரிகள் வாய்ப்பாட்டு நடையிலேயே அமையும். குறில் நெடில் அறிந்து பாடுவதுபோல இவரது வயலினில் இருந்து எழும்பி வரும் இசை, கேட்பவர்களுக்கு வார்த்தைகளாக ஒலிக்கும் இதனை `சாகித்திய வில் ‘ என்பார்கள்.
`சிருங்காரம்’என்ற பெயரில் தான் எடுக்க உள்ள திரைப்படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று சாரதா ராமநாதன் என்ற இயக்குநர் லால்குடியை அணுகினார். பொதுவாக, அவ்வளவாக சினிமா ஆர்வம் இல்லாத லால்குடி , கொஞ்சம் தயங்கிய பிறகு ஏற்றுக்கொண்டார். அந்தப் படம்தான் லால்குடிக்கு 2006-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
இவரது மகன் கிருஷ்ணன், மகள் விஜயலட்சுமி இருவரும் பிரபல வயலின் வித்வான்கள்.

ad

ad