புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2013

தஞ்சம் கோரியவா்களின் படகு விபத்து! இலங்கையா்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா பயணம் செய்த புகலிடக் கோரிக்கையாளர் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் பலர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. படகு விபத்தில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கூட்டுப்படையினரால், கடலில் மிதந்த 8  உயிர் காக்கும் அங்கிகள் மீட்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கொக்கோஸ் தீவுக்கு அருகில் இருந்து இந்த உயிர் காக்கும் அங்கிகள் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக ஏ எப் பி செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
கொக்கோஸ் தீவுகள் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அமைந்திருக்கும் தீவாகும்.
எவ்வாறாயினும் மீட்கப்பட்ட காக்கும் அங்கிகள் எந்த நாட்டிக்கு சொந்தமானது என்ற விடயத்தை தெரிவிக்க அவுஸ்திரேலிய உயரதிகாரிகள் மறுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினரும், எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

ad

ad