புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2013


சுவிட்சர்லாந்தில் தமிழ் திரைப்பட விழா

சுவிட்சர்லாந்தில், தமிழ் திரைப்பட விழா வருகிற ஜூன் 1–ந் தேதி நடக்கிறது. சிவகார்த்திக்கேயன்–பிரியா ஆனந்த் நடித்து, வேந்தர் மூவீஸ் தயாரித்த ‘எதிர் நீச்சல்’
படத்தின் வெற்றி விழா, சிவா நடித்த ‘தில்லுமுல்லு,’ லிப்ரா புரொடக்ஷன்ஸ்–வேந்தர் மூவீஸ் கூட்டாக தயாரித்த ‘நளனும் நந்தினியும்’ ஆகிய படங்களின் பாடல்கள் வெளியீட்டு விழா, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள விக்டோரியா ஹாலில், ஜூன் 1–ந் தேதி நடக்கிறது.

விழாவுக்கு எஸ்.ஆர்.எம். நிறுவன தலைவர் பாரிவேந்தர் தலைமை தாங்குகிறார். நடிகர்கள் சிவகார்த் திக்கேயன், சிவா, பிரகாஷ்ராஜ், நடிகைகள் பிரியா ஆனந்த், இஷா தல்வார், நந்திதா, கோவை சரளா, டைரக்டர்கள் பத்ரி, துரை செந்தில் குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

ad

ad